Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

[Tech30] உணவு டெலிவரியை ட்ரோன் மூலம் அளிக்க உதவும் பெங்களுரு ஸ்டார்ட் அப்!

ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் மேலாண்மையில் கவனம் செலுத்தும் Avianco ஸ்டார்ட் அப் இந்த ஆண்டு யுவர்ஸ்டோரியின் டெக்30 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

[Tech30] உணவு டெலிவரியை ட்ரோன் மூலம் அளிக்க உதவும் பெங்களுரு ஸ்டார்ட் அப்!

Wednesday November 18, 2020 , 3 min Read

“ட்ரோன் மூலம் உணவு டெலிவர் செய்யப்படுவது இனி வெறும் கனவு அல்ல. விரைவில் இது நடக்க உள்ளது,” என்றார் உணவு டெலிவரி ஸ்டார்ட் அப்'பான ஜோமேட்டோ நிறுவனர் மற்றும் சிஇஓ தீபேந்தர் கோயல். கடந்த ஆண்டு இந்நிறுவனம் ட்ரோன் டெலிவரி தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.


இந்த ஆண்டு ட்ரோன்களை இயக்கி சோதனை செய்ய ஹைப்பர்லோக்கல் டெலிவரி ஸ்டார்ட் அப்களான ஜொமேட்டோ, ஸ்விக்கி, டன்சோ ஆகிய நிறுவனங்களுக்கு இந்தியாவின் விமான போக்குவரத்தை கட்டுப்படுத்தும் சிவில் ஏவியேஷன் இயக்குநர் ஜெனரல் ஒப்புதல் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.


யுவர்ஸ்டோரியின் டெக்30 நிறுவனங்கள் 2020 பட்டியலில் இடம்பெற்ற பெங்களூருவைச் சேர்ந்த ட்ரோன் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் Avianco ட்ரோன் மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.


Avianco 2018-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த ஸ்டார்ட் அப் விண்வெளித்துறை மற்றும் விமான போக்குவரத்து தொடர்பான தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குகிறது. இதனால் பாதுகாப்பான ஒருங்கிணைப்பும் முழுமையான தானியங்கி ட்ரோன் பயன்பாடும் சாத்தியப்படும்.

நாடு முழுவதும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs) மற்றும் இணக்கமான சேவைகள் வழங்கப்படுவற்குத் தேவையான முக்கிய மென்பொருளை Avianco வழங்குகிறது.

இந்நிறுவனத்தின் டிஜிட்டல் க்ளௌட் சார்ந்த ட்ரோன் ஆபரேஷன்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட் சாஃப்ட்வேர் (SaaS) தளம் மற்றும் சாஃப்ட்வேர் இண்டெக்ரேஷன் டூல்ஸ் மூலம் இது சாத்தியப்படுகிறது.

ட்ரோன் மூலம் மதிப்பு சேர்த்தல்

ஷ்ரவன் வட்டம்பெட்டி Avianco நிறுவனர் மற்றும் சிஇஓ. இவர் டல்லாஸ், டெக்சாஸ், பெங்களூரு ஆகிய பகுதிகளிடையே தனது நேரம் செலவிட்டு வருகிறார். இவரது ஸ்டார்ட் அப் ஜோமேட்டோ, ஸ்விக்கி, டன்சோ போன்ற நிறுவனங்களுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

1

இந்த ஸ்டார்ட் அப் அதன் SaaS தளம், டேஷ்போர்ட், சாஃப்ட்வேர் டூல் ஆகியவற்றின் மூலம் நிறுவனங்கள், தனிநபர்கள் போன்ற ட்ரோன் இயக்குபவர்கள் தங்களது UAV ஆபரேஷன்களை தடையின்றி எளிதாக மேற்கொள்ள உதவுகிறது. ட்ரோன் சார்ந்த லாஜிஸ்டிக்ஸ், டெலிவரி, கண்காணிப்பு போன்ற பகுதிகளில் கவனம் செலுத்துகிறது.


வாடிக்கையாளர்களாக இணைந்துள்ள நிறுவனங்கள் இந்தத் தளத்தின் மூலம் தரவுகளை நிகழ்நேர அடிப்படையில் பெறலாம். இவர்களது செயல்பாடுகள் அனைத்தும் மையப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

“விபத்துகளைத் தவிர்க்க ட்ரோன் மேலாண்மை முக்கியம். இதை எங்கள் தளம் உறுதிசெய்கிறது. நிறுவனத்தைப் பொருத்தவரை ஹார்ட்வேர் பகுதியில் எந்தவித மாற்றமும் செய்யவேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு முறை நிறுவினால் போதும். மென்பொருள் சார்ந்த எங்கள் தீர்வுகளுடன் இணைக்கப்படும்,” என்றார் ஷ்ரவன்.
“எங்களுடைய தளம் முழுமையான ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை சார்ந்தது. ட்ரோன் சேவை வழங்குவோர் தங்களது வாடிக்கையாளார்களுக்கு மதிப்பை சேர்க்க உதவுகிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.

உலக பொருளாதார மன்றத்தின் ‘Medicine from the sky’ என்கிற பிராஜெக்டில் தெலுங்கானா அரசாங்கத்துடன் இணைந்து இந்த ஸ்டார்ட் அப் தற்போது பணியாற்றி வருவதாக ஷ்ரவன் தெரிவிக்கிறார். இது ரத்தம் உள்ளிட்ட முக்கிய மருத்துவப் பொருட்களை ட்ரோன் மூலம் டெலிவர் செய்யும் மிகப்பெரிய பிராஜெக்ட் ஆகும்.

“விவசாயம், தொழில்துறை ஆய்வு மற்றும் கண்காணிப்பு, டெலிவரி வழங்குதல் போன்ற பிரிவுகளில் ட்ரோன் சார்ந்து செயல்படுவோர்களிடம் முக்கியக் கவனம் செலுத்துகிறோம்,” என்றார்.

சுயநிதியில் இயங்கும் இந்த ஸ்டார்ட் அப் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இதன் சேவைக்கு கட்டணம் செலுத்தும் முதல் வாடிக்கையாளரை இணைத்துக்கொண்டது. மேலும் தற்போது சோதனை கட்டத்தில் உள்ள பல வாடிக்கையாளர்களை இணைத்துக்கொள்ளும் செயல்முறையில் தீவிரம் காட்டி வருகிறது.

சந்தை மற்றும் வருங்காலம்

அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் பிராடக்ட் டெவலப்மெண்ட், சந்தைப்படுத்துதல், பணியமர்த்துதல் போன்றவற்றை செயல்படுத்த 1 மில்லியன் டாலர் நிதி திரட்ட Avianco எதிர்நோக்கியுள்ளது. இந்நிறுவனம் தற்சமயம் 10 பேர் கொண்ட குழுவாக செயல்பட்டு வருகிறது.


இந்நிறுவனம் இந்திய சந்தையில் முக்கிய கவனம் செலுத்தினாலும் வருங்காலத்தில் ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா பசபிக் போன்ற பகுதிகளில் செயல்படவும் திட்டமிட்டுள்ளது.

“ட்ரோன் சந்தை வளர்ச்சியடைந்து வருகிறது. 2025ம் ஆண்டில் இந்தத் துறை 45-50 பில்லியன் டாலர் மதிப்புடையதாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மிக அதி அளவாக 6-10 சதவீதம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்தியாவில் முக்கிய கவனம் செலுத்த உள்ளோம்,” என்றார்.

ட்ரோன் மற்றும் ட்ரோன் சார்ந்த அப்ளிகேஷன் உலகம் முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ட்ரோன் சார்ந்த தொடர்பற்ற டெலிவரியின் முக்கியத்துவத்தை உலக மக்கள் சிறப்பாகப் புரிந்துகொள்ள பெருந்தொற்று உதவியுள்ளது.


Avianco போன்ற புதிய தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் சாஃப்ட்வேர் தளங்களுக்கான தேவை நிலவுகிறது. வரும் நாட்களில் பல்வேறு துறைகளில் பெரியளவில் ட்ரோன் பயன்பாடுகள் அதிகரிக்க இருக்கும் நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் நிச்சயம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


ஆங்கில கட்டுரையாளர்: ராமர்கோ சென்குப்தா | தமிழில்: ஸ்ரீவித்யா