Techsparks 2021- ஸ்டீவ் வாஸ்னியோக் முதல் தேஜோ கோட்டே வரை பங்கேற்கும் சர்வதேசப் பேச்சாளர்கள்!
டெக்ஸ்பார்க்ஸ் 2021 நிகழ்ச்சி முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை பெரிதாக நடைபெறுகிறது. இந்த முறை, நம் எல்லைகளை கடந்து, ஒரு தேசமாக நாம் ஸ்டார்ட் அப் பிரபஞ்சத்திற்கு தலைமை ஏற்பது மற்றும் இணைந்து செயல்படுவது பற்றி கவனம் செலுத்த இருக்கிறோம். சர்வதேச பேச்சாளர்களும் பங்கேற்கின்றனர்.
Techsparks 2021 நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியாவில் இருந்து மட்டும் அல்ல, சர்வதேச அளவில் இருந்தும் பேச்சாளர்கள் இடம்பெறுகின்றனர்.
ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் வாஸ்னியோக் துவங்கி, ரோல்ஸ் ராய்ஸ் இந்தியா மற்றும் தெற்காசிய தலைவர் கிஷோர் ஜெயராமன் வரை பல சர்வதேச பேச்சாளர்கள், சர்வதேச ஸ்டார்ட் அப்கள் இந்தியா வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும் வழிகள், இந்திய பிராண்ட்கள் சர்வதேச அளவில் வளர்வதற்கான வாய்ப்புகள் மற்றும் உலகின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இணைந்து செயல்படக்கூடிய வழிகள் பற்றி பேச இருக்கின்றனர்.
டெக்ஸ்பார்க்ஸ் 2021 நிகழ்ச்சியில் பங்கேற்கும் சர்வதேச பேச்சாளர்களில் முக்கிய நபர்கள் பற்றிய அறிமுகம்:
ஸ்டீவ் வாஸ்னியோக், இணை நிறுவனர், ஆப்பிள், Woz U, Efforce
சிலிக்கான் வேலி வட்டாரத்தில் வாஸ் என் அன்புடன் அழைக்கப்படும் வாஸ்னியோக், அவருடைய வாழ்க்கை சூத்திரம் H = F to the third power என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். இதன் பொருள் உணவு, உற்சாகம் மற்றும் நண்பர்களாகும்.
ஆப்பிளின் முதல் கம்ப்யூட்டர்களை வடிவமைத்தவராக அவரை பலரும் அறிந்திருக்கலாம். ஆனால், அவரை தனிப்பட்ட முறையில் அறிந்தவர்கள் பெர்க்லி வளாகத்தில் கேளிக்கையான வம்பு விளையாட்டுகளில் ஈடுபட்டவராக குறிப்பிடுகின்றனர்.
தொழில்நுட்ப பயிற்சி மேடையான WozU, நிறுவனத்தை நடத்தி வருவதோடு, WOZX எனும் சொந்த கிர்ப்டோ நாணயத்தை வெளியிட்டது வரை பல துறைகளில் பிஸியாக இயங்கி கொண்டிருக்கிறார் ஸ்டீவ்.
யோரம் வின்கார்டே நிறுவனர், சி.இ.ஓ Dealroom.co
உலகின் மிகவும் பிரகாசமான நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் புரிதலை பெறுவதற்கான இடமான Dealroom.co செக்கோயா, இன்சைட் பாட்னர்ஸ் மற்றும் கூகுள், அமேசானல் ஸ்டிரைப் உள்ளிட்ட நிறுவனங்கள் பற்றிய தகவல்களை அறிவதற்கான நிறுவனமாக திகழ்கிறது.
இதன் நிறுவனரான யோரம், லேமான் பிரதர்ஸ், நொமுரா செக்யூரிட்டீஸ் மற்றும் நோவா அட்வைரஸ் உல்லிட்ட நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்கிறார். மேலும், நெதர்லாந்து ஸ்டார்ட் அப் சூழலில் பற்றியும் அனுபவம் உள்ளவர்.
நெதர்லாந்தை நோக்கி எனும் பேனலில் அவர் உரையாற்றுவதை கேளுங்கள், மற்றும் இந்தியாவுக்கான நெதர்லாந்து தூதர் Marten van den Berg, இன்னவோஷன் குவார்ட்டரின் ஸ்டெப் பிரின்சன் மற்றும் ஷிப்ஸ்கார்ட் நிறுவனர் துருவ் சஹானி பேசுவதையும் கேட்கலாம்,
Thejo Kote நிறுவனர், சி.இ.ஓ, ஏர்பேஸ் செலவு நிர்வாக மேடையான ஏர்பேஸ் நிறுவனர் என்ற முறையில் தெஜோ, நிது நுட்பத்துறையில் முக்கிய நபராக விளங்குகிறார். இதைவிட பெங்களூருவில் இருந்து சொலிக்கான் வேலிக்கான அவரது பயணம் இன்னும் சுவாரஸ்யமானது.
இந்த அனுபவம் பற்றி அவர் யுவர்ஸ்டோரி சீனியர் எடிட்டர் ராம்கரோ சென்குப்தாவிடம் உரையாற்ற இருக்கிறார்.
ரயான் ஹூவர், நிறுவனர், பிராடக்ட் ஹண்ட்
ஸ்டார்ட் அப்கள், தொழில்முனைவோர், புதிய பொருட்கள் அபிமானிகள், தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கான கண்டறிதல் மேடையை உருவாக்கியவர் என்ற முறையில், ரயான் ஹூவர் ஸ்டார்ட் அப் உலகில் தனி இடத்தை பெறுகிறார்.
ஏஞ்சல் லிஸ்ட் நிறுவனத்தை உருவாக்கிய நவல் ரவிகாந்திடம், விற்கப்பட்டுவிட்ட இந்த சேவை, நுகர்வோல் லட்சக்கணக்கான புதிய பொருட்களை அறிமுகம் செய்து கொள்ள உதவியிருக்கிறது.
டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் இவரது உரையை கேட்கக் காத்திருங்கள்.
ஹான்ஸ் டுங் (Hans Tung) , நிர்வாக இயக்குனர், GGV Capital
உலகின் முன்னணி 100 வென்ச்சர் முதலீட்டாளர்களில் ஒருவராக கருதப்படும் ஹான்ஸ் டுங், இ-காமர்ஸ், சமூக நுட்பம், பகிர்வு பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்களில் கவனம் செலுத்துகிறார்.
இதுவரை, ஆபர் அப், பெலிடோன், போஷ்மார்க், ஸ்லேக், ஏர்பிஎன்பி, உடான், வேதாந்து உள்ளிட்ட 16 யூனிகார்ன்களில் முதலீடு செய்துள்ளார்.
இந்திய ஸ்டார்ட் அப் சூழலின் தீவிர ஆதரவாளரான ஹான்ஸ், இந்திய தொழில்முனைவோர் உலகிலேயே சிறந்தவர்கள் என முந்தைய யுவர்ஸ்டோரி நேர்காணலில் கூறியுள்ளார். டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் அவர், இந்தியாவின் அடுத்த 100 கோடி பயனாளிகள் மற்றும் இதனால் உண்டாகும் வாய்ப்புகள் பற்றி பேச இருக்கிறார்.
கேல் ஹெண்டர்சன், ஸ்லேக் சி.டி.ஓ
அலுவலக மேசேஜிங் சேவை நிறுவனமான ஸ்லேக், கொரானா சூழலில் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இதற்கு முன்னரே கூட, ஸ்லேக் அலுவலக பயன்பாட்டில் பெரிய அளவில் தாக்கம் செலுத்தியது.
ஸ்லேக்கின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான ஹெண்டர்சன், துவக்கம் முதல் சேவையை உருவாக்குபவர்கள் மற்றும் அதை பயன்படுத்தியவர்கள் இடையே அதிக இடைவெளி இல்லாததே இந்த சேவையின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என ஒருமுறை கூறியிருந்தார்.
உண்மையில் நிறுவனம் கிளிட்ச் எனும் ஆன்லைன் கேமை உருவாக்கி கொண்டிருந்த போது இரண்டு இடங்களில் இருந்த அலுவலகங்களிடையே தொடர்பு கொள்வதற்காக ஸ்லேக் உருவாக்கப்பட்டது.
ஸ்டார்ட் அப் துறையில் தனது அனுபவம் மற்றும் கோவிட்-19 க்கு பிந்தைய உலகில் வர்த்தக வாய்ப்புகள் பற்றி அவர் பேச இருக்கிறார்.
Jingjin Liu, சி.இ.ஓ, நிறுவனர், ZaZaZu
ZaZaZu மிகவும் வித்தியாசமான நிறுவனமாகும். பெண்களுக்கான தனிப்பட்ட நல சேவையான ZaZaZu கல்வி, பொருட்கள், டிஜிட்டல் சேவைகளை ஒன்றாக கொண்டு வந்து பெண்கள் தங்கள் பாலியில் ஆரோக்கியத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வழி செய்கிறது. வல்லுனர்கள் ஆலோசனை, பயிலறங்குகள் உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது.
டிக்கில்.லைப் மற்றும் IMBesharam ஆகிய நிறுவனங்கள் கொண்ட பிரிவில் இடம்பெற்ம் லியூ, மனத்தடைகளை நீக்கி, மக்கள் தங்கள் சொந்த உடலை கண்டறிவது பற்றி பேச இருக்கிறார்.
Vladimir Novakovski, இணை நிறுவனர், சி.இ.ஓ, Lunchclub
பொதுவான ஆர்வம் கொண்டவர்களை இணைக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலை பயன்படுத்தும் தொழில்முறை வலைப்பின்னலாக லஞ்ச்கிளப் திகழ்கிறது. இதன் உருவாக்கினரான விலாதிமீர், பேனிமே, சிட்டாடல் இன்வெஸ்ட்மண்ட், குவாரா உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார். பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஏஞ்சல் முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளார்.
டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில், லஞ்ச்கிளப் இணை நிறுவர் ஸ்டீபன் நகேவுடன் அவர், யுவர்ஸ்டோரி ரிசர்ச் இயக்குனர் மதன்மோகன் ராவுடன் இந்திய யூனிகார்ன்கள் பற்றி உரையாடுகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அபாராஜிதா சக்சேனா | தமிழில்: சைபர் சிம்மன்