Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'இந்திய ஸ்டார்ட் அப் இடத்தை வலுவாக்க, ரு.25,000 கோடி நிதி முக்கியம்,' என்கிறார் அமிதாப் காந்த்!

யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் 2024 நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் காந்த், இந்திய நிதி கழகங்கள், ஆழ்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

'இந்திய ஸ்டார்ட் அப் இடத்தை வலுவாக்க, ரு.25,000 கோடி நிதி முக்கியம்,' என்கிறார் அமிதாப் காந்த்!

Monday September 30, 2024 , 2 min Read

உலகின் முன்னணி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் சூழலிடமாக இந்தியா உருவாக முயன்று கொண்டிருக்கும் நிலையில், ஆழ்நுட்பம் எனும் பிரிவு கவனத்திற்கான பிரிவாக தனித்து நிற்கிறது. ஆழ்நுட்ப புதுமையாக்கங்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ,25,000 கோடி நிதிகளின் நிதி உருவாக்கம், உலக அரங்கில் இந்தியாவின் இடத்தை உறுதிப்படுத்துவதற்கான அடுத்த முக்கிய அடியாக அமையும், என இந்திய அரசின் ஜி20 ஷெர்பா, அமிதாப் காந்த் நம்பிக்கை கொண்டுள்ளார்.

tech
“ஆழ்நுட்பத் துறைக்கான நிதிகளின் நிதியான ரூ.25,000 கோடி மிகவும் தேவைப்படும் முக்கிய அம்சமாக அமைகிறது என்று குறிப்பிட்ட அமிதாப் காந்த், ஸ்டார்ட் அப்'களுக்கான நிதியில் நாடு நல்ல முன்னேற்றம் கண்டிருந்தாலும், ஏஐ, ரோபோவியல், பயோடெக், குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட துறைகளை ஊக்குவிக்க சிறப்பு ஆழ்நுட்ப நிதி அவசியம்," என்றார்.

“இந்தியா நிறைய மூலதனத்தை கொண்டுள்ளது. நாம் அந்நிய மூலதனத்தை சார்ந்திருக்க வேண்டாம். ஸ்டார்ட் அப்`களில் விசிக்களுடன் இணைந்து மக்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால் போதும்,’ என்று பெங்களூருவில் நடைபெற்ற டெக்ஸ்பார்க்ஸ் 2024 நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் காந்த் இவ்வாறு கூறினார்.

இந்தியாவின் தொழில்நுட்ப எதிர்காலத்தை வடிவமைக்க உள்நாட்டு நிதியின் முக்கியத்துவத்தை காந்தின் அழைப்பு வலியுறுத்துகிறது. இந்திய ஸ்டார்ட் அப் சூழல் வளர்ச்சிக்கு வெளிநாட்டு நிதி முக்கியம் என்றாலும். இந்திய முதலீட்டாளர்கள் முன்வந்து, ஆழ்நுட்பத்துறையில் கணக்கிடப்பட்ட இடர்களை மேற்கொள்ள வேண்டும் என காந்த் கருதுகிறார்.

"இந்தியர்கள் ஸ்டார்ட் அப்'களில் முதலீடு செய்ய வேண்டும். நன்கு பரிசீலித்த பிறகு இந்திய காப்பீடு மற்றும் பென்ஷன் நிதிகள் முதலீடு செய்ய வேண்டும்,” என்று ஸ்டார்ட் அப் சூழலை வலுவாக்குவதில் உள்நாட்டு நிதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

விண்வெளி, புவிபரப்பு மற்றும் செமிகண்டகடர் ஆகிய துறைகளில் சரியான கொள்கை மாற்றங்கள் மூலம் இந்தியா தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துறைகளில் அண்மைக்கால சீர்திருத்தங்கள் புதுமையாக்கத்திற்கான புதிய வாய்ப்புகளை உண்டாக்கியுள்ளன. இந்த உத்வேகம் தொடர வேண்டும் என காந்த் கருதுகிறார்.

“விண்வெளி, டிரோன், புவிபரப்பு, செமிகண்டக்டர் போல மற்ற துறைகளையும் திறந்துவிட வேண்டும், என குறிப்பிட்டார்.

இந்தியா 1600 ஆழ்நுட்ப ஸ்டார்ட் அப்'களை கொண்டிருப்பதாக நாஸ்காம் அறிக்கை தெரிவிக்கிறது. இவற்றின் சந்தை அளவு 14 பில்லியன் டாலர்.

ஆழ்நுட்பத்திற்கான நிதிகளின் நிதி, புதுமையாக்கத்தை ஊக்குவிக்க, ஆய்வுகளை வேகமாக்க, ஸ்டார்ட் அப்`கள் அதிக தாக்கம் உள்ள நீண்ட கால நோக்கிலான தொழில்நுட்பத் தீர்வுகளை அளிக்க உத்வேகம் அளிக்கும்.

100க்கும் மேலான யூனிகார்ன்கள், துடிப்பான தொழில்முனைவு பரப்பை கொண்டுள்ள இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சூழலாக உருவாகியிருந்தாலும், முதலிடத்தை அடைவதற்கான பாதை ஆழ்நுட்பத்தை ஊக்குவிப்பதில் அடங்கியிருக்கிறது, என காந்த் கூறினார்.

நாம் உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சூழலாக உள்ளோம். முதலிடத்தை பெற வேண்டும் என்பது நம் இலக்கு, என தெரிவித்தார்.

ஆங்கிலத்தில்: அபராஜிதா சக்சேனா, தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan