'100 கோடி நுகர்வோரை சென்றடையும் ஒரு மேடை இந்தியாவில் இல்லை' - TechSparks-இல் நவீன் திவாரி!
டெக்ஸ்பார்க்ஸ் 2024 நிகழ்ச்சியில் பேசிய Inmobi இணை நிறுவனர் நவீன் திவாரி, ஒரு ஸ்டார்ட் அப் உருமாறி வளர்வதற்கு மிகப்பெரிய தடை வெளியில் இருந்து வருவது அல்ல, உள்ளுக்குள் இருப்பது என்றார்.
வர்த்தகம் சார்ந்த வர்த்தகத்தில் (B2B) இருந்து நுகர்வோர் சார்ந்த வர்த்தகத்திற்கு (B2C) மாறுவதற்கு, நிறுவனத்தின் மரபணுவையே மாற்றி அமைக்க வேண்டும் என்றும் நுகர்வோர் தொழில்நுட்ப மேடை இன்மொபி (InMobi) நிறுவனர், சி.இ.ஓ., நவீன் திவாரி தெரிவித்தார்.
“கடந்த ஏழாண்டுகளுக்கு முன், எங்களது வர்த்தகங்களுக்கான மேடை மீது நுகர்வோர் மேடையை உருவாக்க முயன்ற போது, இந்த மற்றத்தை எதிர்கொண்டோம்,” என்று பெங்களூருவில் நடைபெற்ற டெக்ஸ்பார்க்ஸ் 2024 நிகழ்ச்சியில் யுவர்ஸ்டோரி நிறுவனர், சி.இ.ஓ. ஷ்ரத்தா சர்மாவுடன் பேசிய நவீன் திவாரி தெரிவித்தார்.
புதுமையாக்கம் தான் இத்தகைய மேடையை உருவாக்க முக்கியம், என்றார். “உலகில் உள்ள மிகப்பெரிய நுகர்வோர் மேடைகளை நோக்கினால், அவை அனைத்தும் ஏதேனும் ஒன்றை புதுமையாக்கம் செய்திருப்பதை கவனிக்கலாம். அவை ஏதேனும் ஒன்றை நகலெடுத்தவை அல்ல. யூடியூப்பை எடுத்துக்கொண்டால், அதன் காலத்தில் புதுமையானது. டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் எல்லாம் இப்படித் தான். இவை அனைத்துமே அடிப்படையில் புதுமையான ஒன்றை உருவாக்கின, என்றார்.
“ஏற்கனவே உள்ள ஒன்றின் மீது நிறுவனம் புதிய ஒன்றை உருவாக்க முயலும் போது, அது வெற்றி பெற காரணங்கள் குறைவு என்றவர், நூறு கோடி நுகர்வோரை சென்றடையும் ஒரு மேடை இந்தியாவில் இல்லை,“ என்றார்.
“நாம் அதை அடைவோம், அது தன் வகையில் முதலாவதாக இருக்கும் என்று கூறியவர், ஒரு நிறுவனம் புதுமையாக்கம் செய்து உருவாவதற்கான சவால்கள் வெளியில் இருந்து வருபவை அல்ல என்றார். நிறுவனங்கள் சில அம்சங்கள் சார்ந்த மரபணு கொண்டுள்ளன,“ என்றார்.
“ஒரு நிறுவனத்தின் பரிணாமம் எதிர்கொள்ள எளிதானது அல்ல. ஏனெனில், இப்போது பி2இசிக்கான தசை கொண்டுள்ளோம், பி2பிக்கான வலுவான தசைகொண்டுள்ளோம். இந்த மரபணு மாற்றத்திற்கு, நாம் ஒன்றுக்கு மாற இருக்கிறோம், நீங்கள் அதற்கு தயாராகுங்கள் என்று நிறுவன தலைமை சொல்ல வேண்டியிருந்தது. இதற்கான உதாரணங்கள் இருக்கின்றன என்றாலும் அதிகம் இல்லை. இந்த பெரிய மாற்றத்தை மேற்கொண்டதில் பெருமை கொள்கிறோம்,” என்றார்.
இந்தியாவின் முதல் யூனிகார்ன் ஸ்டார்ட் அப்பான, இன்மொபி, பி2பி விளம்பர நுட்ப நிறுவனமாக துவங்கி, இன்று தனது கிலான்ஸ் மற்றும் Roposo மேடைகள் மூலம் முன்னணி உள்ளடக்க நிறுவனமாக உள்ளது.
ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan