Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

இவர் தான் கர்நாடாகவின் ’10 ரூபாய் மருத்துவர்’

இன்றும் நோயாளிகளுக்கு மருந்து, ஊசி உட்பட ஒட்டுமொத்த சிகிச்சைக்கும் மிகக்குறைந்த கட்டணமாக பத்து ரூபாய் மட்டுமே பெற்றுக் கொள்கிறார் இவர். ஏன் தெரியுமா?

இவர் தான் கர்நாடாகவின் ’10 ரூபாய் மருத்துவர்’

Thursday November 21, 2019 , 2 min Read

உலகளாவிய போட்டித் திறன் அட்டவணையில் 141 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் சுகாதார பராமரிப்பு அடிப்படையில் இந்தியா 110-வது இடம்பெற்று மிகவும் பின் தங்கி இருக்கிறது.


உதாரணத்திற்கு ஆரோக்கியமான வாழ்க்கை அடிப்படையில் உலக பொருளாதார மன்றத்தால் இந்தியா 109-வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

சுகாதார பராமரிப்பு வழங்கப்படுவதிலும் தரத்திலும் இருக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு நாட்டில் உலகளாவிய சுகாதார பராமரிப்பை மேம்படுத்த ஆயுஷ்மான் பாரத் போன்ற முயற்சிகளை அரசாங்கம் சமீபத்தில் மேற்கொண்டுள்ளது.
1

அத்துடன் இத்தனை ஆண்டுகளில் தனிநபர்களும் அரசு சாரா நிறுவனங்களும் முன்வந்து இந்தப் பிரிவில் பங்களித்து வருகின்றன. அத்தகைய தனிநபர்களில் ஒருவர்தான் டாக்டர் அண்ணப்பா என் பாலி. இவர் மூன்று நபர்கள் அடங்கிய குழுவின் உதவியுடன் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்குகிறார்.


இதற்காக 10 ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார். இதில் மருந்து, ஊசி மற்றும் இதர சிகிச்சைகளும் அடங்கும் என ’தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவிக்கிறது.

79 வயதாகும் இந்த மருத்துவர் கர்நாடகாவின் பெலகவி மாவட்டத்தில் உள்ள பைஹோங்கல் நகரில் வசிக்கிறார். இவரது மருத்துவமனை காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும் மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் செயல்படுகிறது. தினமும் 75 முதல் 150 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். இவரிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் ஏழ்மை நிலையில் இருப்பதால் அவர்களிடம் 10 ரூபாயையும் பெற்றுக்கொள்ளாமல் இலவசமாகவே சிகிச்சையளிக்கிறார்.

இந்த சேவையை வழங்குவதற்காக அண்ணப்பாவை மக்கள் ’10 ரூபாய் மருத்துவர்’ என அன்புடன் அழைப்பதாக ஸ்டோரிபிக் தெரிவிக்கிறது.

2

அண்ணப்பா மிகக்குறைந்த வருவாய் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சிறு வயதில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளார். ’தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ உடனான உரையாடலில் அவர் கூறும்போது,

”போர்டிங் பள்ளியில் தங்கி இலவசமாக படிக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பின்னர் சிலரது உதவியுடன் ஹூப்ளி கேஎம்சி-யில் எம்பிபிஎஸ் முடித்தேன். அதன் பிறகு 1978ல் மைசூருவில் ஈஎன்டி பிரிவில் டிப்ளோமா முடித்தேன்,” என்றார்.

அண்ணப்பா பட்டப்படிப்பை முடித்த பிறகு 1967-ம் ஆண்டு அரசு சுகாதாரத் துறையில் சுகாதார அதிகாரியாக பணிபுரியத் தொடங்கினார். 1998-ம் ஆண்டு மாவட்ட அளவிலான மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணராக (District Surgeon) ஓய்வு பெற்றார்.

”வறுமையின் கொடுமை எனக்கு பரிச்சயமான ஒன்று. நான் அதை அனுபவித்துள்ளேன். பணத்தைத் தேடி ஓடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மன அமைதியையே விரும்புகிறேன். ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் அது எனக்குக் கிடைக்கிறது,” என்றார்.

சிகிச்சையை இலவசமாக வழங்கினால் நோயாளிகள் அதன் முக்கியத்துவத்தை உணரமாட்டார்கள் என்கிற காரணத்தினாலேயே 10 ரூபாய் வசூலிப்பதாக அண்ணப்பா விளக்கமளித்தார்.


கட்டுரை: THINK CHANGE INDIA