ஊர் நெல்லை, படிப்பு சென்னை, பெங்களூருவின் 3-வது பணக்காரப் பெண் - யார் இந்த அம்பிகா சுப்ரமணியன்?
நெல்லையை சொந்த ஊராகக் கொண்ட அம்பிகா சுப்ரமணியம் சென்னை அண்ணா பல்கலை.யில் பொறியியல் பட்டம் பெற்று, தொழிலில் பல சாதனைகளைக் கடந்து, பெங்களூருவின் 3-வது பணக்கார பெண்ணாகத் திகழ்கிறார்.
அம்பிகா சுப்ரமணியன் பில்லியன் டாலர் மதிப்புள்ள ‘யூனிகார்ன்’ ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கு தலைமை தாங்கிய முதல் இந்திய பெண் என்ற சாதனையைப் படைத்தவர். இதனை அவர் எப்படிச் சாதித்தார் என்பது ஆச்சரியமும் சுவாரஸ்யமும் மிக்க வெற்றிக் கதையாகும்.
இந்தியாவின் ‘சிலிக்கான் வேலி’ என்று அழைக்கப்படும் பெங்களூருவில் உள்ள பணக்கார பெண்களின் பட்டியலில் ‘பயோகான்’ தலைவர் கிரண் மஜும்தார்-ஷா மற்றும் ‘பைஜூஸ்’-ன் இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத் ஆகியோருக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் இருக்கிறார் அம்பிகா சுப்பிரமணியன். இன்று இவர் ஒரு பெரிய தொழிலதிபர், முதலீட்டாளராக மதிக்கப்பட்டு வருகிறார்.
அம்பிகா சுப்ரமணியத்தின் சொத்து மதிப்பு ரூ.1,830 கோடி என்கிறது ஒரு நம்பகத் தரவு.
சென்னை மாணவி அம்பிகா!
திருநெல்வேலிதான் அம்பிகாவுக்கு சொந்த ஊர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பட்டதாரி ஆன அவர், அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் கணினிப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொழில் துறையில் பல சாதனைகளை படைத்துள்ள இவர், பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்டார்ட்-அப்பை வழிநடத்தும் முதல் இந்தியப் பெண் என்பது அதில் கவனிக்கத்தக்க ஒன்று.
அம்பிகா 1998ல் தகவல் தொடர்பு நிறுவனமான ‘மோட்டோரோலா’வுடன் தனது கரியர் வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் 2004ல்
எனும் நிறுவனத்தில் சேர்ந்தார். இந்த நிறுவனம் அவரது முன்னாள் கணவர் தீரஜ் ராஜாராம் என்பவரால் நிறுவப்பட்டது. முன்னணி தரவு பகுப்பாய்வு நிறுவனத்தின் தலைமை ஆபரேட்டிங் அதிகாரி மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் நிறுவனத்தில் பல பணிகளைக் கவனித்து வந்தார். 2017-ஆம் ஆண்டில், ஹுருன் பணக்காரர்களின் பட்டியலில் இந்தியாவின் எட்டு பணக்காரர்களில் இளையவர் என்ற பெருமைக்குரிய இடத்தைப் பிடித்தார்.கணவருடன் விவாகரத்து ஆன பிறகு, அம்பிகா ‘Mu Sigma’ நிறுவனத்தில் தனக்கு இருந்த 24% பங்குகளை தீரஜ் ராஜாராமுக்கு விற்றார். 1990-களின் முற்பகுதியில் சென்னையில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் அம்பிகாவும் ராஜாராமும் முதன்முதலில் சந்தித்தனர். இருவரும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தார்கள். பின்னர், இருவரும் மிச்சிகனில் உள்ள வெய்ன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் கணினி பொறியியல் படிக்கச் சென்றனர்.
பிரிவும் தெரிவும்
ராஜாராம் ‘Mu Sigma’ என்ற தன் சொந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு ‘பூஸ் ஆலன் ஹாமில்டன்’ மற்றும் ‘பிடபிள்யூசி’ போன்ற ஆலோசனை நிறுவனங்களுடன் பணிபுரிந்தார், இல்லினாய்ஸில் உள்ள அவர்களது வீட்டை விற்று தனது தனிப்பட்ட சேமிப்பில் 200,000 டாலர் முதலீட்டில் ‘Mu Sigma’ வளர்ந்தது. 2007ம் ஆண்டில் அம்பிகா சுப்ரமணியன், Mu Sigma நிறுவனத்தில் சேர்ந்தார். Mu Sigma நிறுவனமானது இந்தியாவில் உள்ள மையங்களில் இருந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும்-டேட்டா பகுப்பாய்வை வழங்கிய வர்த்தக மாதிரியை ஒட்டி வேகமாக வளர்ந்தது.
இந்நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் IBM, Cognizant மற்றும் Accenture என ஆலோசனை நிறுவனத்தின் மான்ஸ்டர்கள் ஏற்கெனவே சந்தையில் கோலோச்சிக்கொண்டு இருந்தன. எனினும், இவை யாவும் MuSigma-வின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. அந்த நிறுவனங்களில் இருந்து மாற்றி சிந்தித்ததே அவை MuSigma ஏற்றம் பெறக் காரணம்.
அது குறித்த முழு விவரம் > #100UNICORNS | 'யுனிக்' கதை 03 | MUSIGMA - பில்லியன் டாலர் நிறுவனத்தை நிறுவிய பிசினஸ் அனுபவமில்லாமல் தீரஜ் ராஜாராம்!
2012ல், இந்நிறுவனம் 100 மில்லியன் டாலர் வருவாய் இலக்கைத் தாண்டி, இந்தியாவின் முதல் லாபகரமான நிறுவனங்களில் ஒன்றானது. இருப்பினும், உள் நெருக்கடி காரணமாக 2016-ஆம் ஆண்டு நிறுவனம் ஆட்டம் கண்டது. அம்பிகாவும் ராஜாராமும் விவாகரத்து செய்ய முடிவு செய்தபோது, அவர்களது நிறுவனம் சில கடுமையான கொந்தளிப்பை எதிர்கொண்டது.
மேலும், பல முக்கியமான ஊழியர்கள் நெருக்கடியில் நிறுவனத்தை விட்டு வெளியேறினர். குழப்பம் காரணமாக வணிக இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில்தான், அம்பிகா தனது Mu Sigma பங்குகளை அப்போதைய கணவர் ராஜாராமுக்கு விற்றார்.
பிறகு, அம்பிகா தனது அடுத்த முயற்சியான hyphen.social என்ற சோஷியல் நெட்வொர்க்கிங் தளத்தை 2018-ம் ஆண்டு தொடங்கினார். இதோடு மட்டுமல்லாமல் பெரிய முதலீட்டாளராகவும் அவர் உயர்ந்தார். அதாவது, Innov8, Piper Biosciences, Box8, ICE Creative Excellence மற்றும் CarterX போன்ற வரவிருக்கும் நிறுவனங்களை ஆதரித்து வெற்றிகரமான முதலீட்டாளராகவும் மாறினார்.
“நல்ல முடிவுகளை விரைந்து எடுப்பதுதான் வெற்றிக்கு அடித்தளம். அதேநேரத்தில், அந்த முடிவு தெளிவானதாக இருக்க வேண்டும்,” என்பார் அம்பிகா.
ஆம், அதிவேகமாக முடிவெடுத்து அதிரடி காட்டுவதுதான் அம்பிகாவின் வெற்றிக்கான சூத்திரம்.
ரூ.7,65,000 கோடி மதிப்பு நிறுவனத்தை நிர்வகிக்கும் மும்பை பெண்: ரேஷ்மா கேவல்ரமணி கதை தெரியுமா?
Edited by Induja Raghunathan