விப்ரோ, நெஸ்லேவை விட பணக்காரர் ஆன திருப்பதி கோயில் - ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான விப்ரோ, நெஸ்லே, ஒஎன்ஜிசி ஆகியவற்றை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு திருப்பதி கோயின் சொத்து மதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான விப்ரோ, நெஸ்லே, ஒஎன்ஜிசி ஆகியவற்றை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு திருப்பதி கோயிலின் சொத்து மதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ஐடி சேவை நிறுவனமான விப்ரோ, உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான நெஸ்லே மற்றும் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் ஐஓசி ஆகியவற்றின் சந்தை மூலதனத்தை விட திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலின் சொத்து மதிப்பை விட அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில்:
இந்தியாவில் உள்ள கோயில்களிலேயே செல்வம் குவியும் கோயிலாக திருமலை திருப்பதி உள்ளது. நாடு முழுவதும் மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்.
தொழிலதிபர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், திரை மற்றும் விளையாட்டுத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் தங்களது பிரார்த்தனை நிறைவேறியதற்காகவும், வருமானத்தில் ஒரு பகுதியை பெருமாளுக்கு சமர்ப்பித்து வருகின்றனர்.
தங்கம், வெள்ளி, வைரம், நவரத்தினங்கள், கோடிக்கணக்கில் ரொக்கம் என பலவற்றையும் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் பணக்காரக் கடவுளாக பார்க்கப்படுகிறார். இந்நிலையில், திருப்பதி தேவதாஸ்தானம் தன் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த வெள்ளை அறிக்கையை கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் சொத்து மதிப்பு:
திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 1933ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிலையில், முதன் முறையாக அதன் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 10.25 டன் தங்கம் வைப்பு, 2.5 டன் தங்க நகைகள், சுமார் ரூ.16,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 960 இடங்களில் நிலங்கள், இவை அனைத்தும் 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில்,
“திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) மலைக் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் ரொக்கம் மற்றும் தங்க காணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வங்கிகளில் நிலையான வைப்புகளும் மூலம் வட்டி விகிதங்கள் அதிகரிப்பதால் தேவஸ்தானம் அதிக வருமானத்தை ஈட்டுகின்றன,” எனத் தெரிவித்துள்ளார்.
TTD-க்கு சொந்தமான சொத்துக்களில் நிலப் பார்சல்கள், கட்டிடங்கள், வங்கிகளில் உள்ள பணம் மற்றும் தங்க வைப்புத்தொகைகள், பக்தர்கள் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்படுகின்றன.
ஓர் ஆண்டில் 2.5 கோடி பக்தர்கள் செலுத்தும் காணிக்கைத் தொகை கணிசமாக சேர்ந்து இந்த நிலையை எட்டியுள்ளது. வங்கி டெபாசிட்களின் மூலம் ஆண்டுக்கு 668 கோடி ரூபாய் வட்டி வசூலாகிறது. பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்ட 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்டிஜெட்டின் படி,
சுமார் 3,100 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடப்பட்டு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பின்னுக்குத் தள்ளப்பட்ட விப்ரோ:
பெங்களூரை தளமாகக் கொண்ட விப்ரோவின் ரூ.2.14 லட்சம் கோடியாக உள்ளது. அல்ட்ராடெக் சிமென்ட் சந்தை மதிப்பு ரூ.1.99 லட்சம் கோடியாக உள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உணவு மற்றும் பானங்கள் விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனமான நெஸ்லேவின் இந்திய சொத்து மதிப்பு ரூ.1.96 லட்சம் கோடி ஆகும். இந்த நிறுவனங்களின் சொத்து மதிப்பை விட திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு அதிகம் ஆகும்.
அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), சக்தி நிறுவனமான NTPC லிமிடெட், வாகன உற்பத்தியாளர்களான மஹிந்திரா மற்றும் மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ், உலகின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தியாளர் இந்தியா லிமிடெட், சுரங்க நிறுவனமான வேதாந்தா, ரியல் எஸ்டேட் நிறுவனம் DLF உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சொத்து மதிப்பும், திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பை விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
பில்லியனர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ரூ. 17.53 லட்சம் கோடி), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (ரூ.11.76 லட்சம் கோடி), ஹெச்டிஎஃப்சி வங்கி (ரூ.8.34 லட்சம் கோடி), இன்ஃபோசிஸ் (ரூ.6.37 லட்சம் கோடி), ஐசிஐசிஐ வங்கி (ரூ.6.31 லட்சம் கோடி) ஆகியவை அடங்கும்.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (ரூ. 5.92 லட்சம் கோடி), பாரத ஸ்டேட் வங்கி (ரூ. 5.29 லட்சம் கோடி), பார்தி ஏர்டெல் (ரூ. 4.54 லட்சம் கோடி) மற்றும் ஐடிசி (ரூ. 4.38 லட்சம் கோடி) ஆகியவற்றை விட தேவதாஸ்தானத்தின் சொத்து மதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: கனிமொழி
திருப்பதிக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய இஸ்லாமிய தம்பதி: குவியும் பாராட்டுக்கள்!