சிறந்த Youtube Shorts வீடியோ படைப்பாளிகளுக்கு பரிசு: 1000 மில்லியன் டாலர் நிதி அறிவித்த யூடியூப்!
யூடியூப்பில் குறும் வீடியோக்கள் மூலம் அதிக அளவில் பயனாளிகளிடன் தொடர்பு கொள்பவர்கள் மற்றும் பார்வையை கொண்ட கிரியேட்டர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசளிக்க யூடியூப் திட்டமிட்டுள்ளது.
உள்ளடக்க உருவாக்குனர்கள் வருவாய் ஈட்ட மற்றும் பரிசுகளை பெற வழி செய்யும் வகையில், ‘யூடியூப் ஷார்ட்ஸ் பண்ட்’ (Youtbe Shorts Fund) எனும் 100 மில்லியன் டாலர் நிதியை யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான வலைப்பதிவில், குறும் வீடியோ மூலம் அதிக பார்வையாளர்களைக் கவரும் கிரியேட்டர்களை மாதந்தோறும் தொடர்பு கொண்டு அவர்களுக்கு பரிசளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் பங்குதாரர் திட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்லாமல், மூல குறு வீடியோக்களை உருவாக்கும் அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
"யூடியூப் மேடையில் தனித்தன்மை வாய்ந்த குறும் வீடியோக்களை (ஷார்ட்ஸ்) உருவாக்கும் எவரும் இதில் பங்கேற்கலாம்,” என்று யூடியூப் ஷார்ட்ஸ் திட்ட இயக்குனர் ஆமி சிங்கர் கூறியுள்ளார்.
வரும் மாதங்களில் இந்த நிதி அறிமுகம் செய்யப்படும் போது மேலும் விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
யூடியூப்பில் ஷார்ட்ஸ் மூலம் வருவாய் ஈட்ட வழி செய்வதற்கான யூடியூப் பயணத்தில் இது முதல் படி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“இது எங்களுடைய முன்னுரிமையாகும். இதைச் சரியாக செய்ய சில காலம் ஆகலாம். இதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். பயனாளிகளுடம் இருந்து கருத்துக்களை கேட்டறிந்து, இதற்கான நீண்ட கால திட்டத்தை உருவாக்குவோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வசதியை சரியாக புரிந்து கொள்வதற்காக விளம்ப்ரங்களை பரிசோதிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்காவில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் யூடியூப், குறும் வீடியோ வசதியை யூடியூப் ஷார்ட்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்து வருகிறது. டிக் டாக் பாணியிலான இந்த மேடை, 15 நொடி வீடியோக்களை உருவாக்க வழி செய்கிறது.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், டெய்லிஹண்ட் ஜோஷ், ஷேர்சேட் மோஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த பிரிவில் செயல்படுகின்றன.
ஆங்கிலத்தில்: ராசி வர்ஷனி | தமிழில்: சைபர்சிம்மன்