Zomato ஐபிஓ ஜூலை 14; ஒரு பங்கின் விலை ரூ.72-76: ரூ.9,375 கோடி திரட்ட திட்டம்!
ஐபிஓ மூலம் ரூ .9,375 கோடி நிதி திரட்ட முடிவு!
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான Zomato-வின் ஐபிஓ எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு சில தினங்கள் முன் செபி ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து ஜொமோட்டோ நிறுவனம் ஐபிஓ பங்கின் விலை ஒன்றுக்கு 72-76 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. இந்த நிர்ணயத்தால் ஐபிஓ மூலம் ரூ.9,375 கோடி நிதி திரட்ட முடியும் அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஜொமோட்டோவின் ஐபிஓ வரும் ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை 16 ஆம் தேதி மூடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஜொமோட்டோ நிறுவனத்தில் இன்ஃபோ எட்ஜ் நிறுவனம் 18.55 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. இதனிடையே, தான் 9,000 கோடி ரூபாய் புதிய ஐபிஓ வெளியீட்டில் இருந்தும், மீதம் 375 கோடி இன்ஃபோ எட்ஜ் நிறுவனம் மூலமும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஃபோ எட்ஜ் நிறுவனத்தின் ஐபிஓ மூலம் 750 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை முதலில் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், சில நாட்களுக்கு முன்பு 375 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய அந்த நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இது ஜொமாடோ மீதான நம்பிக்கையையும் அதன் ஐபிஓ சிறப்பாக செயல்படும் என்ற எதிர்பார்ப்பையும் குறிக்கிறது. இதக்கிடையே, கிரே சந்தையில் (grey market) ஜொமோட்டோவின் பங்குகள் ரூ.87 முதல் 92 வரை வர்த்தகம் செய்யப்படுகின்றன, இது அதன் விலை மேல் வரம்பை விட கிட்டத்தட்ட 15-20 சதவீதம் அதிகம்.
இதற்கிடையேதான், கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (செபி) பூர்வாங்க ஐபிஓ ஆவணங்களை தாக்கல் செய்து, ஐபிஓவுக்கு விற்பனைக்கு விண்ணப்பித்து. எந்தவொரு நிறுவனமும் ஐபிஓ, பொதுச் சலுகை (எஃப்.பி.ஓ) மற்றும் உரிமைகள் பிரச்சினை போன்ற பொது பங்குகளை விற்கத் தொடங்க செபியின் அவதானிப்பு அவசியம். அந்த அடிப்படையில் ஜொமோட்டோ நிறுவனம் விண்ணப்பித்து.
ஆன்லைன் உணவு விநியோகமானது கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இதில் ஜொமோட்டோ, ஸ்விக்கி ஆகியவை இந்திய சந்தையை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஜொமோட்டோவின் 2019-20 வருவாய் முந்தைய நிதியாண்டில் இருந்து இரண்டு மடங்கு உயர்ந்து 394 மில்லியன் டாலர்களாக (சுமார் 2,960 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தொகை (ஈபிஐடிடிஏ) ஆகியவற்றின் வருவாய் ரூ.2,200 கோடியாக இருந்தது. இந்த வருவாய்க்கு மத்தியில் சீனாவை சேர்ந்த ஆண்ட் குரூப் மற்றும் டைகர் குளோபல் உள்ளிட்ட சில நிறுவனங்களும் ஜொமோட்டோ நிறுவனத்தில் கணிசமாக முதலீடு செய்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில்: அபராஜிதா | தமிழில்: மலையரசு