Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மின்சார ஆட்டோக்களில் வீடுகளுக்கேச் சென்று காய்கறிகள், இலவச கபசுரம் குடிநீர் விநியோகம்!

மலிவு விலையில் விற்கப்படும் இந்த காய்கறிகள் சென்னையைச் சுற்றி வந்து மக்களின் குடியிருப்புகளுக்குச் நேரடியாகச் சென்று டெலிவரி செய்யும்.

மின்சார ஆட்டோக்களில் வீடுகளுக்கேச் சென்று காய்கறிகள், இலவச கபசுரம் குடிநீர் விநியோகம்!

Sunday April 12, 2020 , 2 min Read

தமிழக முதலமைச்சரால் அண்மையில் தொடங்கிவைக்கப்பட்ட M Auto நிறுவனத்தின் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கேச் சென்று கொள்முதல் விலைக்கு காய்கறிகள், இலவச கபசுரம் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை ஆலோசகர் அமர் பிரசாத் தொடங்கி வைத்துள்ளார்.

2

மாசில்லா தமிழகம் என்ற நோக்கத்தில் M Auto நிறுவனத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட மின்சார ஆட்டுக்களின் இயக்கத்தை அண்மையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.


ஏற்கெனவே பயணிகள் ஆட்டோக்கள், நடமாடும் டீ கடைகள், போன்றவை M Auto நிறுவனத்தால் வடவமைககப்பட்ட மின்சார ஆட்டோக்களாக இயங்கிவருகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், யாரும் வெளியே சென்று கடைகளில் கூட்டமாக நின்று சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


இதனால் குடியிருப்புகளுக்கே நேரடியாக M Auto நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மின்சார ஆட்டோக்களில் சென்று, கொள்முதல் செய்யப்பட் விலையில் காய்கறிகள், கரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள அரசால் அங்கிகரிக்கப்பட்ட இலவச கபசுரம் மருந்து, இலவச முகக்கவசம், போன்றவை வழங்கும் சேவை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

1

முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே இயக்கப்படவுள்ள இந்த நடமாடும் மின்சார வாகன காய்கறிக் கடையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், வைரஸ் பரவும் வழிமுறைகள் அடங்கிய காணொளிகள் வாகனத்தின் இருபுறங்களிலும் ஒளிபரப்படுகிறது. மேலும் வாகனத்தை சுற்றிலும் கேமராக்கள் பொருத்துப்பட்டு, வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஸ்வைப்பிங் இயந்திரம் என அனைத்து வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளது.

3

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை ஆலோசகர் அமர் பிரசாத்,

“கரோனா அச்சுறுத்தல் இருக்கும் இதுபோன்ற சூழ்நிலையில், M Auto நிறுவனத்தின் கபசுரம் குடிநீருடன் நடமாடும் வாகனத்தில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவது வரவேற்கத்தக்க ஒன்று. மாநில அரசு இதுபோன்று முயற்சிகளுக்கு சரியான அங்கீகாரம் அளித்தால் இது போன்ற நிறுவனத்துக்கு மேலும் ஊக்குவிப்பாக இருக்கும்,” என்றார்.

இது குறித்து M Auto நிறுவனத்தின் இயக்குனர் மன்சூர் அலிகான் கூறுகையில், “ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இதுபோன்ற சூழலில், யாரும் வீட்டைவிட்டு வெகுதூரம் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் மாசில்லா தமிழகம் என்ற நோகத்தில் எங்கள் மின்சார வாகனத்தில், காய்கறிகளையும், கபசுரம் குடிநீர், முகக்கவசம் போன்றவற்றை குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்கிறோம்,” என்றார்.

வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள இடங்களில் எங்கள் M Auto நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட வாகனம் மூலம் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. இதனால் மற்ற இடங்களைவிட 30 முதல் 50 சதவீதம் வரை விலை குறைவாகவே இருக்கும் என்றார்.
ஆட்டோ காய்கறிகள்

மேலும், எங்கள் வாகனத்தில் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்த காத்துக்கொள்ளும் கபசுர குடிநீர், முகக்கவசம், கை கழுவும் வசதிகள் போன்றவை இலவசமாக கொடுக்கப்படும் என்று கூறினார்.


கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், ஒன்றுகூடாமல் இருப்பது, தனிமைப்படுத்திக்கொள்ளுதல் போன்றவற்றால் மட்டுமே இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்ற நோக்கத்தில் இந்தியாவில் முதல்முறையாக இந்த நடமாடும் மின்சார காய்கறி வாகனம் அறிமுகப்படும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.