லாக்டவுன் 4.0 : மத்திய அரசு அளித்துள்ள நெறிமுறைகள் என்ன?
லாக்டவுன் 4.0 -ல் சில தளர்வுகளும், சில கட்டுப்பாட்டுகள் தொடரும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது.
மே 17 அன்று வந்த அறிவிப்பின்படி, மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது. ஆனால் இந்த லாக்டவுன் 4.0 -ல் சில தளர்வுகளும், கட்டுப்பாட்டுப்பகுதிகளில் மட்டும் கட்டுப்பாட்டுகள் தொடரும் என அறிவிப்புகள் வந்தது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு மண்டலங்கள் அடிப்படையில் கட்டுப்பாடுகளை தளர்த்தவும், தொடரவும் மாநிலங்களும்/ யூனியன் பிரதேசங்களும் முடிவு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் கட்டுப்படுத்தல் மண்டலங்களை அடையாளம் காணுதல்
- சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அளவுகோல்படி மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் வரையறுக்க வேண்டும்.
- சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களில் உள்ள கட்டுப்படுத்தல் மற்றும் காப்பு மண்டலங்களை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள்படி மாவட்ட அதிகாரிகள் வரையறுக்க வேண்டும்.
தேசிய அளவில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள்
- பயணிகளுக்கான அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணங்கள்
- மெட்ரோ ரயில் சேவைகள்.
- கல்வி நிறுவனங்கள் / பயிற்சி / கோச்சிங் மையங்கள்.
- சுகாதாரத்துறை/காவல்துறை/அரசு அதிகாரிகள்/சுகாதாரத்துறை பணியாளர்கள்/வெளியூர் நபர்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தனிமை மையங்கள் மற்றும் பஸ், ரயில் நிலைய, விமான நிலைய கேன்டீன்கள் தவிர இதர உணவகங்கள், விடுதிகள் மற்றும் இதர விருந்தோம்பல் சேவைகள்.
- உணவகங்களுக்கான சமையல் அறைகளுக்கு அனுமதி உண்டு. ஆனால் வீட்டு டெலிவரி உணவுகளுக்கு மட்டும்.
- அனைத்து சினிமா அரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்குகள், மதுபான பார்கள் மற்றும் ஆடிட்டோரியங்கள்/ கூட்டம் நடைபெறும் அரங்குகள் மற்றும் அதே போன்ற இடங்கள்.
- சமூக/அரசியல்/விளையாட்டு/பொழுதுபோக்கு/அறிவுசார்/பண்பாட்டு/மத நிகழ்ச்சிகள்/இதர கூட்டங்கள் மற்றும் பெரிய அளவிலான கூட்டங்கள்.
- விளையாட்டு அரங்குகள் மற்றும் ஸ்டேடியங்களுக்கு அனுமதி உண்டு (பார்வையாளர்கள் இல்லாமல்)
- மதக் கூட்டங்கள் உட்பட அனைத்து மத இடங்கள் பொது வழிபாட்டு இடங்கள்.
நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் (கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர)
- மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பரஸ்பர அனுமதியுடன் மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் வாகனங்கள் மற்றும் பஸ் போக்குவரத்து.
- மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்தபடி மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் வாகனங்கள் மற்றும் பஸ் போக்குவரத்து.
கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள்
- தேவையான நடவடிக்கைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
- கட்டுப்படுத்தப்பட்ட மையங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்ய கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றவேண்டும். (மருத்துவ அவசர நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் தவிர)
- மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவேண்டும்.
- பாதிக்கப்பட்டவர்களை தீவிரமாக கண்டறிதல், வீட்டுக்கு வீடு கண்காணிப்பு மற்றும் இதர மருத்துவ செயல்பாடுகள்.
பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் (நாடு முழுவதும்)
- அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர, மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை தனிநபர்கள் நடமாட்டம் கடுமையாக தடுக்கப்படவேண்டும்.
- கடுமையாக பின்பற்றுவதற்கு பொருத்தமான தடை நடவடிக்கைகளை உள்ளூர் அதிகாரிகள் வழங்குவர்.
- அத்தியாவசிய மற்றும் மருத்துவச் சேவைகளுக்கு வெளியே செல்வதை தவிர 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், உடல்நல பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் வீட்டில் இருக்க வேண்டும்.
சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் (கட்டுப்படுத்தல் மண்டலங்களுக்கு வெளியே)
(1) தேசிய அளவில் தடைசெய்யப்பட்ட செயல்பாடுகள்
(2) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் தடைசெய்யப்பட்ட செயல்பாடுகள் தவிர அனைத்து செயல்பாடுகளுக்கும் அனுமதி.
ஆரோக்ய சேது செயலியைப் பயன்படுத்தவும்
மொபைல் போன் பயன்படுத்தும் அனைத்து ஊழியர்களும் ஆரோக்ய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்வதை வேலையளிக்கும் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
- மொபைல் போன் பயன்படுத்துவோர் ஆரோக்ய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்யும்படி மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் மற்றும் சுகாதார தகவல்களை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும்.
பொது இடங்கள் மற்றும் பணியிடங்களுக்கான தேசியளவிலான உத்தரவுகள்
- முகக் கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும்.
- பொது இடங்கள், பொது போக்குவரத்தில் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
- திருமணங்களில் 50 பேருக்கு மேல் கூட்டம் சேரக் கூடாது.
- இறப்பு/இறுதிச்சடங்குகளில் அதிகபட்சம் 20 பேர் கலந்து கொள்ளலாம்.
- பொது இடங்களில் மது, பான், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்த அனுமதி இல்லை.
வேலையிடங்கள் நிறுவனங்களுக்கான தேசிய அளவிலான உத்தரவுகள்
- முடிந்த அளவு வீட்டில் இருந்தே பணியாற்றுவதை பின்பற்ற வேண்டும்.
- அதற்கேற்ப பணி நேரங்களை பின்பற்ற வேண்டும்.
- பொதுப் பகுதிகள், நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் உடல்வெப்பப் பரிசோதனை, கை கழுவுதல், சானிடைசர் வசதிகள் செய்ய வேண்டும்.
- பணியாற்றும் இடங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.
- வேலை செய்யும் நபர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வேலை நேரம், உணவு இடைவேளை ஆகியவற்றுக்கு இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும்
கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளுக்கான கட்டுப்பாடுகள்
- கடைகள் மற்றும் மார்க்கெட்டுகள் குறிப்பிட்டநேரத்தில் திறக்கப்படுவதை உள்ளூர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
- வாடிக்கையாளர்களுக்கு இடையே சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும்.
- ஒரு கடையில் 5 பேருக்குமேல் இருக்கக் கூடாது.
வழிகாட்டு விதிமுறைகளை அமல்படுத்துதல்
- வழிகாட்டு விதிமுறைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
- விதிமுறைகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் நீர்த்துப்போக செய்யக் கூடாது.
தகவல்: பிஐபி