வெள்ளிக்கிழமைக்குள் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குகிறாரா எலான் மஸ்க்?
சமூக ஊடக நிறுவனம் டிவிட்டரை கையகப்படுத்தும் முடிவை வெள்ளிக்கிழமை நிறைவேற்ற இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சமூக ஊடக நிறுவனம் டிவிட்டரை கையகப்படுத்தும் முடிவை வெள்ளிக்கிழமை நிறைவேற்ற இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், இந்த ஒப்பந்தத்திற்கு நிதி உதவி அளிக்கும் நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நிதி உதவி அளிப்பவர்களுடன் நடைபெற்ற வீடியோ உரையாடலில் மஸ்க் இந்த தகவலைத் தெரிவித்ததாக ப்ளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றான டிவிட்டரை வாங்க இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஏப்ரல் மாதம் அறிவித்தார். எனினும், டிவிட்டர் தரப்பில் பொய் கணக்குகள் தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்படவில்லை என்று கூறி இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
மஸ்க்- டிவிட்டர் விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி நிதிமன்ற விவகாரமாகவும் மாறியது. இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் கெடுவும் விதித்தது.
இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை அன்று டிவிட்டர் கையகப்படுத்தலை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. டிவிட்டர் கையகப்படுத்தலுக்காக அவருக்கு நிதி உதவி அளிக்க முன் வந்துள்ள வங்கிகள்,
நிறுவனங்களுடனான வீடியோ உரையாடலில் மஸ்க் இந்த தகவல் தெரிவித்துள்ளதாக ப்ளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
செக்கோயா கேபிடல், பைனான்ஸ் மற்றும் கத்தார் இன்வெஸ்ட்மண்ட் அத்தாரிட்டி உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்கள் இது தொடர்பான ஆவணங்களை மஸ்க் வழக்கறிஞர்களிடம் இருந்து பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்ததில் தொடர்புடைய வங்கிகள், இதற்கான கடனுதவி தொடர்பான ஆவணங்களை இறுது செய்துள்ளதாகவும் தெரிகிறது. எனினும், இந்த செய்தி தொடர்பாக டிவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. மஸ்க் வழக்கறிஞர்கள் தரப்பிலும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கப்படவில்லை.
44 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த கையகப்படுத்தலுக்காக மஸ்க், 46.5 டாலர் அளவுக்கு சமபங்கு மற்றும் கடனுதவி உறுதிகளை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மார்கன் ஸ்டான்லி வங்கி மற்றும் பாங்க் ஆப் அமெரிக்கா ஆகியவை 3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. சிலிக்கான் வேலி தொழில்முனைவோர் லாரி எலிசன், சவுதி இளவரசர் உள்ளிட்டோருக் கடனுதவி அளிக்க முன் வந்துள்ளனர்.
ட்விட்டரை வாங்குகிறாரா? அல்லது ’Super App' உருவாக்கப் போகிறாரா எலான் மஸ்க்?
Edited by Induja Raghunathan