Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

குறைந்த கலோரி உணவுப் பழக்கத்தை பின்பற்றுவது எப்படி?

உடல் எடையை குறைக்க பலவிதமான வழிகள் இருந்தாலும், கலோரிகளை கணக்கிட்டு கொண்டிருப்பது மன அழுத்தம் மிக்க, ஆரோக்கியம் இல்லாத வழியாக கருதப்படுகிறது.

குறைந்த கலோரி உணவுப் பழக்கத்தை பின்பற்றுவது எப்படி?

Wednesday October 27, 2021 , 3 min Read

எடை குறைக்க பலவிதமான உணவுக் கட்டுப்பாட்டு பழக்கத்தை பின்பற்றலாம். கலோரி குறைந்த உணவு கட்டுப்பாடு அதில் ஒன்று. நீங்கள் உட்கொள்ளும் உணவு அளிக்கும் ஆற்றல் அளவை கலோரி குறிக்கிறது. உணவு உட்கொள்ளும் போது, அது ஜீரணமாகி, செல்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஆற்றலாக மாற்றப்படுகிறது.


உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஆற்றல் தேவை. பயன்படுத்திக்கொள்ளப்படாத ஆற்றல் கொழுப்பாக மாறுகிறது. ஒவ்வொரின் உடலுக்கு ஏற்ப தேவைப்படும் ஆற்றல் அடிப்படையில், நாம் எடுத்துக்கொள்ளும் கலோரி அளவை கட்டுப்படுத்துவதாக கலோரி குறைந்த உணவு பழக்கம் அமைகிறது. எடை குறைக்க பெரும்பாலானோர் பின்பற்றும் பழக்கமாக இது அமைகிறது.


இந்த அணுகுமுறைக்கு ஏற்ப எவ்வளவு சாப்பிடுவது என தீர்மானிப்பது எப்படி?


கலோரி குறைந்த உணவுப் பழக்கத்தை பின்பற்ற, பிஎம்.ஐ எனப்படும் உடல் எடை அட்டவணை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு பலவழிகள் இருந்தாலும் எளிதான வழியை பார்க்கலாம்.


பி.எம்.ஐ கணக்கிட, உங்கள் எடையை, உயரத்தின் வர்கத்தைக் கொண்டு வகுக்க வேண்டும்.

உதாரணமாக உடல் எடை 52 கி மற்றும் உயர, 1.63 மீ என்றால் பி.எம்.ஐ 19.25 ஆகும். 19 க்கு கீழே இருந்தால் அது குறைவாகவும், 25 க்கு மேல் எதுவும் அதிகமாக கருதப்படுகிறது.
உணவு

குறைந்த கலோரி உணவு பழக்கத்தின் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்:


1.  கலோரி உணவு பழக்கம் / நோன்பு பழக்கம்

உடல் எடை குறைய குறைந்த கலோரி உணவு உட்கொள்வதற்கும், நோண்பு இருப்பது போல் சாப்பிடாமல் இருப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. சாப்பிடாமல் இருக்கும் உணவுப் பழக்கம் வாரத்தில் ஐந்து நாட்கள் அல்லது இரண்டு நாட்கள் பின்பற்றப்படலாம். இந்த நாட்களில் கலோரி அளவை 500க்கும் குறைவாக அமைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உடல் நோண்பு இருப்பது போல உணர்ந்து, அதற்குறிய பலனை அளிக்கிறது.


கலோரி குறைந்த உணவுப் பழக்கத்தில் ஒருவர் உடல் தேவையை விட குறைந்த கலோரியை உட்கொள்ளலாம். பல உணவு வகைகளை அதிக கலோரி என தவிர்க்கலாம். காலப்போக்கில் கூடுதலாக உண்பது குறைந்து, கூடுதல் எடையும் குறையும்.


2.  உணவு கலோரி வேறுபாடு

குறைந்த கலோரி உணவின் முக்கிய அம்சம் இது. பல எடை குறைப்பு உணவுப் பழக்கத்தில் தேங்காய், அவோகடோஸ், கொட்டைகள் விதைகள் தவிர்க்கப்படுகின்றன. வெவ்வேறு உணவுக்கு உடலில் வெவ்வேறு விதமான விளைவுகள் உண்டாகின்றன. எல்லா கலோரிகளும் ஒரே மாதிரியானவை அல்ல.


குறைந்த கலோரி உணவு சாப்பிடுபவர்கள் தங்களுக்குப் பிடித்த உணவை குறைவாக உட்கொள்கின்றனர். இதனால் திருப்தியும் ஏற்படுவதில்லை, இரத்த சர்க்கரையும் நிலையாக இருப்பதில்லை.


இதைவிட ஊட்டச்சது மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளை நாடுவது சிறந்தது. ஆரோக்கியமாக உள்ள பலர், ஆரோக்கியமான உணவுகளை நன்றாக உட்கொள்வதற்கு பதில், அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவை குறைவாக சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன்.


மேலும், கலோரிகளை கணக்கிட்டபடி சாப்பிடுவது ஆரோக்கியமான பழக்கம் இல்லை. ஆரோக்கிய கோளாறை உண்டாக்கும் உணவுக்காக காத்திருந்து கலோரிகளை மிச்சமாக்கும் வாய்ப்பிருக்கிறது. இந்த அணுகுமுறையை பின்பற்றுவதாக இருந்தால், திருப்தி மற்றும் மன நிறைவை முக்கியமாக கருதலாம்.

உணவு

3.  சரியான வழியில் தேர்வு

உணவுகளில், முழுமையான உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுக்கு இடையிலான வேறுபாட்டை கவனிக்க வேண்டும். கலோரி குறைவானது எனச் சொல்லப்படும் உணவு, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்களைக் கொண்டிருக்கலாம். இந்த உணவுகளில் பெரும்பாலும் ஊட்டச்சத்து இருப்பதில்லை.


எடை குறைப்பை பொருத்தவரை, நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளை கணக்கு பார்ப்பதைவிட, ஊட்டச்சத்து மிக்க கலோரிகளை உட்கொள்வதே சிறந்தது. ஊட்டச்சத்து குறைவான உணவுகளில் உள்ள வெற்று கலோரிகளை தவிர்த்தாலே போதுமானது.


எல்லாவற்றையும் கணக்கிட்டுக்கொண்டிருக்கும் பொறியில் சிக்க வேண்டியதில்லை. ஊட்டச்சத்து மிக்க கலோரிகள் உங்கள் உடலால் பொருத்தமாக பயன்படுத்திக்கொள்ளப்படும் என்பதால் கொழுப்பாக மாறுவதில்லை.


4.  எளிய பழக்கம்

இந்தியா முழுவதும் உள்ள ஆஸ்ரமங்களில் பலரும் கூடுதல் எடை இல்லாமல் இருக்கின்றன.


இதற்கான காரணங்கள் வருமாறு:


முதல் காரணம் தரையில் அமர்ந்து சாப்பிடுவது. இதனால் குணிந்து சாப்பிட வேண்டியிருப்பதால் எளிதில் ஜீரணமாகிறது. இரண்டாவதாக கவனச்சிதறல் இல்லாமல் சாப்பிட முடிகிறது. மூன்றாவது விஷயம் சாப்பிட்டவுடன் நடமாடிக்கொண்டே இருப்பது. இங்குள்ளவர்கள் பலவிதமான பணிகளை மேற்கொள்கின்றனர்.


இந்த பழக்கங்கள் மூலம் எளிதாக குறைந்த கலோரி உணவுகளை உட்கொள்ளலாம்.


5.  ஊட்டச்சத்து கவனம்

குறைந்த கலோரி உணவுப் பழக்கம் எளிதானதல்ல. இந்த பழக்கத்தை பின்பற்ற விரும்புகிறவர்கள், உணவுப் பழக்கத்தின் பலனை கணக்கிட எடை குறைவது மட்டும் ஒரே வழியல்ல என்பதை உணர வேண்டும். எடை குறைந்த பலர், தங்கள் பி12 மற்றும் இரும்புச்சத்து பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.


எடை குறைப்பில் குறுகிய கால கவனம் செலுத்தி, ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்வதில் நீண்ட கால கவனம் செலுத்த வேண்டும். இதுவே மிகவும் முக்கியம். குறைந்த கலோரி உணவு பழக்கம் காலாவதியான ஒன்றாகவே கருதப்படுகிறது. சரியான முறையில் உடல் எடை குறைக்க இந்த அம்சங்களை நினைவில் கொள்ளுங்கள்.


ஆங்கிலத்தில்: தீபா கண்ணன் | தமிழில்: சைபர் சிம்மன்