மேலும் 10 நகரங்களில் சேவையை தொடங்கும் ஓலா மற்றும் ஊபர்!

புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் சேவையை மீண்டும் தொடங்குவதாக கால் டாக்சி நிறுவனங்களான ஓலா மற்றும் ஊபர் தெரிவித்துள்ளது.

19th May 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

கால் டாக்சி நிறுவனங்களான ஓலா மற்றும் ஊபர் டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் சேவைகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது. நான்காம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கத்தின் புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே இந்த சேவைகள் தொடரப்படும் என்று அறிவித்துள்ளது.


டெல்லி மற்றும் பெங்களூருவில் 50 நாட்களுக்கும் மேலாக கால் டாக்சி சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக அரசாங்கத்தால் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

“லாக்டவுன் 4 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் வழிகாட்டுதல்களின்படி ஊபர் நிறுவனம் இந்தியாவின் கூடுதல் நகரங்களில் சேவைகளை மீண்டும் தொடங்குகிறது. பயணிகளுக்கு எங்களது செயலி மூலம் தகவல்களையும் குறிப்பிட்ட நகரங்களின் நிலவரங்களையும் தொடர்ந்து வழங்குவோம்,” என்று இந்நிறுவனத்தின் வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1

ஊபர் கால் டாக்சி இதற்கு முன்பு 25 நகரங்களில் சேவையளித்து வந்தது. புதிதாக 10 நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 35 நகரங்களில் ஊபர் சேவையளிக்க உள்ளது.


கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி, ஹரியானா, சண்டிகர், பஞ்சாப், தமிழ்நாடு (சென்னை தவிர), ஆந்திரப்பிரதேசம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகன சேவையை ஓலா ஓட்டுநர்கள் வழங்குவார்கள் என்று ஓலா தெரிவித்துள்ளது.

“அன்றாடம் வாகனங்களை ஓட்டுவதால் ஈட்டப்படும் வருவாயை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மில்லியன் கணக்கான ஓலா ஓட்டுநர்களுக்கு இது மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும். ஓலா தற்போது செயல்படும் 160-க்கும் அதிகமான நகரங்களில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பயணத்திலும் பாதுகாப்பு அம்சங்கள் உறுதிசெய்யப்படும்,” என்று ஓலா தெரிவிக்கிறது.

டெல்லியில் இரண்டு பயணிகளுடன் மட்டுமே டாக்சி மற்றும் கார் இயக்கப்படலாம் என்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


தற்போதைய விதிமுறைகளின்படி இரு மாநிலங்களுக்கிடையேயான சேவைகள் அனுமதிக்கப்படவில்லை என்று துறைசார் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஓட்டுநர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதற்கான நடவடிக்கைகளை ஓலா மற்றும் ஊபர் விவரித்துள்ளது.

ஓலா ஓட்டுநர்களும் பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும், பயணம் முடிந்த பிறகு வாகனங்களை முழுமையாக கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படும், விதிமுறைகளின்படி ஒவ்வொரு பயணத்திலும் இரண்டு பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு சமூக இடைவெளி பின்பற்றப்படும் என்பன போன்ற பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்படும் என்று ஓலா தெரிவித்துள்ளது.

ஊபர் ஓட்டுநர்கள் முகக்கவசம் அணிந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே ஊபர் நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் ஓட்டுநர்கள் முகக்கவசம் அணிந்திருக்கும் புகைப்படத்தை செல்ஃபி எடுத்து தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்றும் இந்நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது.


பயணிகள் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்ய முற்படுவது உள்ளிட்ட பாதுகாப்பற்ற சூழலை ஓட்டுநர்கள் உணர்ந்தால் அத்தகைய பயணத்தை ரத்து செய்துவிட இந்நிறுவனங்கள் ஓட்டுநர்களுக்கு அனுமதியளித்துள்ளது.


கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச் 25-ம் தேதியில் இருந்து ஊபர் மற்றும் ஓலா நிறுவனங்கள் தங்களது சேவைகளை நிறுத்திவைத்துள்ளது.


சுகாதாரப் பராமரிப்பு, வங்கி, ஊடகம் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் போக்குவரத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனால் ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் ஓட்டுநர்கள் வருவாயின்றி தவித்து வந்தனர்.


40 நாட்கள் பொதுமுடக்கத்திற்கு பின்னர் மூன்றாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டபோது (மே 4ம் தேதி முதல்) கால் டாக்சி நிறுவனங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதன்படி ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் சேவையளிக்க அனுமதியளிக்கப்பட்டது.


ஊபர் ஜம்ஷெட்பூர், கொச்சி, கட்டாக், கௌஹாத்தி (பச்சை மண்டலம்) உள்ளிட்ட 25 நகரங்களிலும் அம்ரிஸ்தர், ரோதக், குருகிராம், விசாகப்பட்டனம் (ஆரஞ்சு மண்டலம்) உள்ளிட்ட பகுதிகளிலும் சேவையளிக்கத் தொடங்கியுள்ளது. ஓலா 100-க்கும் அதிகமான நகரங்களில் சேவையளிப்பதாக தெரிவித்துள்ளது.


தளர்வுகளுக்குப் பின்னர் இந்நிறுவங்கள் சேவையைத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் தேவை குறைவாகவே இருந்துள்ளது. மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்வதால் தேவை குறைந்துள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


தகவல்: பிடிஐ

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close