Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

அழகுக்கலை நிறுவனங்களுக்கு உதவிட Nykaa துவக்கியுள்ள ரூ.4 கோடி பரிசுத் தொகைத் திட்டம்!

அமெரிக்க அழகு கலை பிராண்ட் Estee Lauder உடன் இணைந்து ரூ.4 கோடி பரிசுத்தொகை கொண்ட இன்குபேட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

அழகுக்கலை நிறுவனங்களுக்கு உதவிட Nykaa துவக்கியுள்ள ரூ.4 கோடி பரிசுத் தொகைத் திட்டம்!

Friday July 22, 2022 , 2 min Read

அழகு கலை மற்றும் தனிநபர் இணைய சந்தையான Nykaa, ஏற்கனவே இந்தியாவில் செயல்பட்டு வரும் அமெரிக்க அழகு கலை பிராண்ட் Estee Lauder உடன் இணைந்து ஸ்டார்ட் அப்களுக்கான இன்குபேட்டரை துவக்கியுள்ளது.

Nykaa மற்றும் அமெரிக்க நிறுவனம், இதற்காக தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு ரூ.4 கோடி மதிப்புக்கு பரிசுத் தொகையை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.

நைகா

சர்வதேச பிராண்ட்களை அறிமுகம் செய்வதோடு, தனிநபர், அழகுக்கலை பிராண்ட்களை கையகப்படுத்தல் மூலம் Nykaa விரிவாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இந்தத் திட்டம் அறிமுகமாகிறது. அண்மையில், அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட மருந்தக சரும நல பிராண்ட் The Ordinary அறிமுகம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

"இந்த பரிசுத்தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுத்த அழகு மற்றும் தனிநபர் நல நிறுவனங்களுக்கு உதவித் தொகை அளிக்கிறோம். இதற்கு பதிலாக நாங்கள் சமபங்கு அல்லது டெர்ம்ஷீட் பரிவர்த்தனையை கேட்கப்போவதில்லை. மேலும், சந்தை மதிப்பீடு பற்றியும் பேசுவதில்லை. ஒருவர் நிறுவனத்தை உருவாக்குவதற்கான உதவித் தொகை போல இதை கருதலாம்,” என்று அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், Nykaa அழகுகலை, இகாமர்ஸ் சி.இ.ஓ Anchit Nayar கூறினார்.

இந்த இன்குபேட்டர் திட்டம், இந்திய திரைப்பட நட்சத்திரம் காத்ரினா கைப், வடிவமைப்பாளர் சபயாஷி முகர்ஜி, ஸ்டைலிஸ்ட் Anaita Shroff Adajania, அமெரிக்காவின் அழகுக்கலை பிராண்ட் Tinted நிறுவனர் Deepica Mutyala மற்றும் Anchit உள்ளிட்டோரை தேர்வுக்குழுவில் கொண்டுள்ளது. குழுவில் உள்ள சிலர், தேர்ந்தெடுக்கப்படும் பிராண்ட்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்படுவார்கள்.

2012ல் இன்வெஸ்ட்மண்ட் வங்கியாளர் பால்குனி நாயரால் (Falguni Nayar ) துவக்கப்பட்ட Nykaa அழகுக் கலை மற்றும் தனிநபர் நலன் சார்ந்த இணைய சந்தையாக விளங்குகிறது. பேஷன் மற்றும் ஆண்களுக்கான சாதனங்கள் பிரிவையும் நிறுவனம் கொண்டுள்ளது.

தனது இணையதளம் மற்றும் நேரடி விற்பனை நிலையங்கள் வாயிலாக, சர்வதேச மற்றும் உள்ளூர் பிராண்ட்களை விற்பனை செய்வதோடு, நிறுவனம் பிராண்ட்களை கையகப்படுத்தியும் வருகிறது.

நைகா

2021 அக்டோபரில் கொல்கத்தாவைச்சேர்ந்த Dot and Key நிறுவனத்தை கையப்படுத்திய நிலையில், ஏப்ரல் மாதம் Pipa Bella ஜுவல்லரி பிராண்டை கையகப்படுத்தியது. மேலும், சில பிராண்ட்களை தனது இன்குபேட்டரில் இருந்து தேர்வு செய்து கையகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

"எங்கள் மனதில் தற்போது பிராண்ட்களுக்கான குறிப்பிட்ட உத்தி இருந்தாலும், இந்த இன்குபேட்டரில் அது மட்டுமே எங்கள் குறிக்கோளாக அமையவில்லை. நன்றாக செயல்படும் அல்லது குறிப்பிட்ட தன்மை கொண்ட பிராண்ட்களில் குறிப்பிட்ட அளவு பங்குகளை வாங்கலாம்,” என்று யுவர்ஸ்டோரியிடம் பேசும் போது Anchit தெரிவித்தார்.

ஆங்கிலத்தில்: பிரச்சன்னத்தா பட்வா | தமிழில்: சைபர் சிம்மன்