Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

டிஜிட்டல் பரப்பில் ரிலையன்சை நெருங்கும் டாடா டிஜிட்டல்: சந்தையில் கடும் போட்டி நிலவுமா?

150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த டாடா குழுமத்தின் டிஜிட்டல் வர்த்தக அங்கமான டாடா டிஜிட்டல், கடந்த மூன்று வாரங்களில் மூன்று முக்கிய ஒப்பந்தங்களை செய்துள்ளது. ஒரு சூப்பர் செயலியை உருவாக்குவதை நோக்கி மேலும் முன்னேறியுள்ளது.

டிஜிட்டல் பரப்பில் ரிலையன்சை நெருங்கும் டாடா டிஜிட்டல்: சந்தையில் கடும் போட்டி நிலவுமா?

Friday June 11, 2021 , 3 min Read

ரத்தன் டாடா மற்றும் முகேஷ் அம்பானி ஆகிய இருவரின் வீடு தெற்கு மும்பையில், சில கிமீ தொலைவில் அமைந்துள்ளன. இந்த இருவரின் டிஜிட்டல் லட்சியமும் இதே போல நெருங்கத் துவங்கியுள்ளது.


இந்திய வர்த்தகப் பரப்பின் மதிப்புமிக்க குழுமங்களாக விளங்கும் இந்த இரண்டு குழுமங்களும், விறுவிறுப்பான போட்டிக்குத் தயாராகின்றன.


டாடா குழுமத்தின் டாடா டிஜிட்டல் மற்றும் ரிலையன்ஸ் இண்ட்ஸ்டிரிசின் டிஜிட்டல் திட்டம் இரண்டும் இணைந்து, இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய இரட்டை ஏகபோகமாக விளங்கலாம் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Tata

அதற்கேற்ப, கடந்த காலங்களில், உப்பு முதல் எஃகு வரையான நிறுவனங்களைக் கொண்ட குழுமம், கார் முதல் ரசாயனம் வரையான நிறுவனங்களின் குழுமம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டு வந்த டாட்ட குழுமத்தின், டிஜிட்டல் திட்டங்கள் வர்த்தக இந்தியாவை திரும்பி பார்க்கை வைத்திருக்கிறது. டாடா டிஜிட்டல், இந்த மூன்று வாரங்களில் மூன்று முக்கிய ஒப்பந்தங்களை செய்துள்ளது.


1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பிக்பாஸ்கெட் கையகப்படுத்தல், 75 மில்லியன் டாலர் மதிப்பில் ஃபிட்னஸ் ஸ்டார்ட் அப் கியூர்பிட் (Curefit) கையகப்படுத்தல் மற்றும் ஆன்லைன் மருந்தகமான 1எம்ஜி (1mg) கையகப்படுத்தல் ஆகியவை இதில் அடங்கும்.


இதன் மூலம் டாடா டிஜிட்டல் இந்திய இணைய பொருளாதாரத்தில் கணிசமான இருப்பைக் கொண்டுள்ளது.


ரிலையன்ஸ், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகிய இணைய நிறுவனங்களுடன் போட்டியிடக்கூடிய டிஜிட்டல் நுகர்வோர் மேடையை உருவாக்குவதற்காக, டாடா டிஜிட்டல், முகேஷ் பன்சாலை தலைவராக நியமனம் செய்துள்ளது.


தொழில்முனைவு பற்றிய புரிதல் கொண்ட பன்சால், Myntra மற்றும் Curefit, ஆகிய இரண்டு ஸ்டார்ட் அப்களை உருவாக்கிய அனுபவம் கொண்டிருக்கிறார். இந்திய இ-காமர்ஸ் பரப்பை உருவாகியதில் முக்கிய நபராகவும் இருக்கிறார்.


2019ல் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகர் முதலில் குறிப்பிட்ட சூப்பர் செயலியை உருவாக்கும் பொறுப்பு பன்சாலிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அடுத்தத் தலைமுறை மேடை என வர்ணிக்கப்படும் இந்த செயலி, மளிகை, மின்னணு பொருட்கள், நிதிச்சேவை, கல்வி, பயணம், என டாடா டிஜிட்டலின் அனைத்து இணையச் சேவைகளையும் ஒரே ஆல்’பில் வழங்கும்.

"அடுத்த தலைமுறை நுகர்வோர் மேடையை உருவாக்கும் பார்வையை டாடா டிஜிட்டல் கொண்டுள்ளது, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக டாடா டிஜிட்டலில் அங்கம் வகிப்பதில் உற்சாகம் கொள்கிறேன்,” என பன்சால் கூறியுள்ளார்.
டாடா

இது இரண்டு விஷயங்களை உணர்த்துகிறது:


1) டாடா டிஜிட்டல் மேலும் கையகப்படுத்தலில் ஈடுபடலாம். டன்சோ (Dunzo) செயலியில் பங்குகளி வாங்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.


2) ரிலையன்ஸ் பின்பற்றியது போன்ற உத்தியை டாடா டிஜிட்டல் பின்பற்றுகிறது.


ஆக, இந்தியாவின் இணைய பொருளாதாரப் போட்டி, டாடா மற்றும் ரிலையன்ஸ் இடையிலான இரு வழி பாதையாக அமையலாம்.


2020ல், ரிலையன்ஸ் நிறுவனம், எண்ணெய் மற்றும் கெமிகல்ஸ் ஆகிய துறைகளில் இருந்து டிஜிட்டல், ரீடைல், டெலிகாம், பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது.

“ரிலையன்ஸ் நல்ல தொலைநோக்கைக் கொண்டுள்ளது. பெளதீக சொத்துக்களை மேலும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு இணையத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என உணர்ந்திருக்கிறது. ரிலையன்ஸ், ஆப்லைன் மற்றும் ஆன்லைன் இரண்டும் கலந்த மாதிரியில் கவனம் செலுத்தும். எல்லா சேவைகளும் இப்போது ஜியோ தொடர்புடையதாக இருக்கிறது,” என்று கிரேஹவுண்ட் ரிசர்ச் நிறுவனர் சன்சித் வீர் கோகியா, யுவர் ஸ்டோரியிடம் முன்னர் ஒருமுறை கூறினார்.

டாடா குழுமத்தின் ஜியோ போன்ற மேடையாக டாடா டிஜிட்டல் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jio akash ambani

RIL Chairman Mukesh Ambani with son Akash Ambani

டாடா–பிக் பாஸ்கெட் ஒப்பந்தம், தோன்றுவதை விட மிகப்பெரியதாக மற்றும் முக்கியமாக அமைகிறது என்றும் கோகியா டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

“டாடா குழுமத்தின் டிஜிட்டல் திட்டங்களுக்கு இது வலு சேர்த்து, பல்வேறு மேடைகளுக்கு இடையே விற்பனையை சாத்தியமாக்கி, தற்போதுள்ள வாடிக்கையாளர் பரப்பில் இருந்து அதிக வருமானம் பெற வழி வகுக்கும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் ஆன்லைன் மளிகைச் சந்தை 2025ல் 24 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், டாடா – பிக் பாஸ்கெட் ஒப்பந்தம் மிகவும் முக்கியமாகிறது.

“இந்தியாவில் தனிநபர்கள் வாங்கும் பழக்கத்தில் மளிகைப் பொருட்கள் அதிக அளவில் அமைந்துள்ளது. எனவே, பெரிய டிஜிட்டல் நுகர்வு பரப்பை உருவாக்கும் எங்கள் திட்டத்தில் பொருந்துகிறது,” என டாடா டிஜிட்டல் சி.இ.ஓ பிரதிக் பால் அண்மையில் கூறியிருந்தார்.

ஆக, இந்திய இணைய பொருளாதாரத்தில் டாடா மற்றும் ரிலையன்ஸ் இடையிலான போட்டி தீவிரமாக உள்ளது. இந்நிலையில், நிறுவனங்களை கையகப்படுத்துவது வளர்ச்சிக்கான வழியாக அமையும்.


ஆங்கிலத்தில்: சோஹினி மித்தர் | தமிழில்: சைபர் சிம்மன்