Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

ராணுவ வீரர்களின் தியாகக் கதைகளை வெளியிடும் ஆன்லைன் நினைவகம்!

12 ஆயிரத்துக்கும் அதிகமான ஜவான்களின் உந்துதலளிக்கும் கதைகளை புகைப்படங்களுடன் வெளியிட்டு அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் தளம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ராணுவ வீரர்களின் தியாகக் கதைகளை வெளியிடும் ஆன்லைன் நினைவகம்!

Monday December 16, 2019 , 3 min Read

1947-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து கிடைத்த சுதந்திரத்தை இந்தியா கொண்டாடி மகிழ்ந்த அதேநேரம் பிரிவினையின் தாக்கமும் இருந்தது. அப்போதிருந்து உள்நாட்டு சண்டகள் தொடங்கி கடும் போர் வரை பல ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். போர் வீரர்களின் நினைவகமாக 'அமர் ஜவான் ஜோதி' இருப்பினும் அனைத்து வீரர்களுக்குமான நினைவகம் ஏதும் இல்லை.


அஃப்ராஸ் சிறு வயது முதலே இது குறித்து கவலைப்பட்டார். சென்னை பல்கலைக்கழகத்தில் டிஃபென்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டமும் ஐஐஎம் அஹமதாபாத்தில் நிர்வாக மேலாண்மை புரோக்ராமும் படித்தார். அதன் பிறகு 25 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணியாற்றினார்.

1
விங் கமாண்டர் அஃப்ராஸ் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக ராணுவத்தில் பணியாற்றியவர்கள். எனவே வீரர்களின் தியாகங்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைப்பதில்லை என்கிற வருத்தம் அவருக்கு எப்போதும் இருந்து வந்தது.

இவர் தனது பணிக்காலம் நிறைவடைந்த பிறகு தியாகிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நன்றி பாராட்டி அவர்களது நலனில் பங்களிக்க விரும்பினார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு விங் கமாண்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் விங் கமாண்டர் எல் கே சௌபி ஆகியோரை சந்தித்தார். இவர்கள் 25 ஆண்டுகள் விமானப் படையில் பணியாற்றிய அனுபவமிக்கவர்கள். இவர்கள் ஒன்றிணைந்து 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘ஹானர்பாயிண்ட்’ (Honourpoint) தொடங்கினார்கள்.

”சரியான பார்ட்னர்களைக் கண்டறிவதற்கு அவகாசம் தேவைப்பட்டது. இந்தப் பணியில் ஈடுபட தன்னுடைய நேரத்தையும் பணத்தையும் செலவிடத் தயாராக இருக்கும் தனிநபர்கள் அவசியம். ஆனால் பலர் இதற்கு முன்வரவில்லை,” என்றார் அஃப்ராஸ்.
2

ஆன்லைன் நினைவகம்

உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை கௌரவித்து நினைவு அஞ்சலி செலுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஆன்லைன் நினைவகமான ’ஹானர்பாயிண்ட்’ தளத்தில் 1947-ம் ஆண்டு முதல் அனைத்து தரவுகள் இடம்பெற்றுள்ளன.

மக்கள் ராணுவ வீரர்களையும் அவர்களது குடும்பங்களையும் மறந்துவிடாமல் நினைவில் நிறுத்திக்கொள்ளும் விதமாக ஹானர்பாயிண்ட் தனித்துவமாக செயல்படுகிறது. தியாகிகளின் உந்துதலளிக்கும் வாழ்க்கையை கதையாகப் படம்பிடித்து காட்டுகிறது. மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்வதையும், தேசப்பற்றையும் ஊக்குவிக்கிறது. அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுகிறது.

பெங்களூருவைச் சேர்ந்த ஹானர்பாயிண்ட் 11 பேர் அடங்கிய குழுவாக செயல்படுகிறது. இரண்டாண்டுகளில் இணையம், புத்தகங்கள், பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள் போன்றவற்றில் இருந்து தியாகிகள் பற்றிய தகவல்களை சேகரித்தனர்.


பின்னர் இவற்றை உந்துதலளிக்கக்கூடிய கதைகளாகத் தொகுத்து இந்தத் தளத்தில் வெளியிட்டனர். தகவல் தொகுப்பின் அளவானது ஒவ்வொரு வீரருக்கும் மாறுபடும். சிலரைப் பற்றி அவரது குடும்பத்தினர் தெரிவித்த தகவல் இருக்கும். சிலரைப் பற்றிய கட்டுரைகள் தொகுப்பு இருக்கும். இன்னும் சிலரைப் பற்றிய கவிதைகள் இடம் பெற்றிருக்கும். இந்த ஊக்கமளிக்கும் கதைகள் சிறப்பாக வெளிவர உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்கள் பெரும் பங்களித்தன.

”உதாரணத்திற்கு மேஜர் அக்‌ஷய் கிரீஷ் குமாரின் கணக்கை அவரது அம்மா நிர்வகித்து வருகிரார். இவர் நகரோடா பகுதியில் தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிரிழந்துள்ளார். இவரைப் பற்றிய அனைத்து தகவல்களையும் இவரது அம்மா வழங்கினார். இவருக்கு அஞ்சலி செலுத்தப்படுவது இவரது அம்மாவை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இதுவே எங்களது விருப்பம்,” என்றார் அஃப்ராஸ்.

இந்தத் தளத்தை ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு தகவல்கள் அனைத்தையும் சேகரிக்க இரண்டாண்டுகள் ஆனது.

”தியாகிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி கிடைப்பதற்கு அரசாங்கங்களும் பொதுமக்களும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்தியா அதன் ஹீரோக்களை மறந்துவிடவில்லை என்பதை அவர்களது குடும்பங்களுக்கு எடுத்துரைப்பது அவசியமாகிறது. தியாகிகள் பற்றி எழுதப்படும் நினைவஞ்சலிகள் அவர்களது குடும்பங்களுக்கு ஒருவிதமான மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுக்கும். அந்த உணர்ச்சியானது விலைமதிப்பற்றது. எங்கள் தளம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி தியாகிகளின் குடும்பங்கள் ஒன்றிணைய விரும்புகிறோம்,” என்றார்.
3

ஆதரவு அமைப்பு

ஹானர்பாயிண்ட் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை கௌரவிக்கிறது. அவர்களது குடும்பங்கள், சக வீரர்கள், பொதுமக்கள் என அனைவரும் அவர்களது இழப்பை நினைத்து துயரங்கொள்ளச் செய்கிறது. இந்த வகையில் ’ஹானர்பாயிண்ட்’ அனைவரின் உணர்வு ரீதியான தேவைகளுக்கும் தீர்வாகிறது.


வருங்காலத்தில் தியாகிகளின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட நிதித்தேவைகளுக்கு ஆதரவளிக்க நிதி உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. அரசாங்க கொள்கைகள் தொடர்புடைய சிக்கல்கள், ஓய்வூதியத் தொகையை மீட்டெடுத்தல், ஆலோசனை வழங்குதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

”இது ஒரு சமூக முயற்சி. நிதியுதவியின்றி இத்தகைய முயற்சிகளை நீண்ட கால அடிப்படையில் மேற்கொள்வது சாத்தியமில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்தத் தளத்தின் நோக்கத்தை மக்களிடையே கொண்டு சேர்த்து நம்பகத்தன்மையை ஏற்படுத்தினால் மக்கள் நிச்சயம் எங்களுடன் கைகோர்ப்பார்கள்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர்: சிரீஷா தமர்லா | தமிழில்: ஸ்ரீவித்யா