உலகின் 25 டாப் நிறுவனங்களின் சிஇஓ ஆக இருக்கும் இந்திய வம்சாவளியினர்!

By YS TEAM TAMIL
September 20, 2022, Updated on : Tue Sep 20 2022 06:31:33 GMT+0000
உலகின் 25 டாப் நிறுவனங்களின் சிஇஓ ஆக இருக்கும் இந்திய வம்சாவளியினர்!
உலகளவில் பிரபலமாக செயல்படும் 25 நிறுவனங்களில் சிஇஓ-வாக பொறுப்பு வகிக்கும் இந்திய வம்சாவளியினர் பற்றிய தொகுப்பு.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இது இந்தியர்களான நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படவேண்டிய விஷயம்.


இதுமட்டுமல்ல, நாம் பெருமைப்படுவதற்கு மற்றொரு விஷயமும் இருக்கிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமானோர் Google, Microsoft, Twitter, Adobe என மிகப்பெரிய நிறுவனங்களில் சிஇஓ பொறுப்பு வகிக்கின்றனர். இதில் பல நிறுவனங்களில் பெண்களும் சிஇஓ பொறுப்பில் இருப்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது.

Top Indian CEOs

பிரபல நிறுவனங்களின் இந்திய சிஇஓ-க்கள்

அந்த வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் சிஇஓ பொறுப்பு வகிக்கும் சில நிறுவனங்களைப் பற்றி பார்ப்போம்:

Google Aphabet Inc – சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை 1972-ம் ஆண்டு பிறந்தவர். இவரது அப்பா எலக்ட்ரிகல் என்ஜினியர், அம்மா ஸ்டெனோகிராஃபர்.

sundar pichai

பள்ளிப்படிப்பை முடித்த சுந்தர் பிச்சை, ஐஐடி கராக்பூரில் மெட்டாலர்ஜி பிரிவில் பொறியியல் படிப்பு முடித்தார். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்எஸ் முடித்த பிறகு வார்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தார்.


2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். 2015-ம் ஆண்டு Google நிறுவனம் Alphabet Inc நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியபோது சுந்தர் பிச்சை அதன் சிஇஓ ஆனார். பிராடக்ட் மேனேஜ்மெண்ட் குழுவிற்கு தலைமை வகித்து Chrome, Chrome OS டெவலப் செய்தார். Google Drive, Android டெவலப்மெண்ட் பணிகளுக்கு முக்கிய பொறுப்பேற்றிருந்தார்.

“நான் அமெரிக்க குடிமகனாக இருந்தாலும்கூட என்னுள் இந்தியா ஒன்று கலந்திருக்கிறது. என்னில் முக்கியப் பங்கு வகிக்கிறது,” என்று நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

Twitter – பராக் அக்ராவல்

Twitter நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேக் டார்சி பதவியை ராஜினாமா செய்த பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகராவல் Twitter சிஇஓ-வாக பதவி உயர்வு பெற்றார்.

parag agarwal

பராக் 2011-ம் ஆண்டு Twitter நிறுவனத்தின் சேர்ந்தார். 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) பணியாற்றி வருகிறார். அவர் ஐஐடி மும்பை பொறியியல் பட்டதாரி, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பிஎச்டி முடித்திருக்கிறார்.

Microsoft – சத்ய நாதெள்ளா

சத்ய நாதெள்ளா 1967-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி பிறந்தார். ஹைதரபாத்தில் இருக்கும் அனந்தபூர் மாவட்டத்தில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார். இவரது அப்பா ஐஏஎஸ் அதிகாரி.

satya nadella

சத்யா நாதெள்ளா 1992-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். 2014-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி சிஇஓ-வாக தேர்வு செய்யப்பட்டார்.


பெகும்பெட் பகுதியில் இருக்கும் ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். கர்நாடகாவின் மணிப்பால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் பிடெக் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் முடித்தார். அமெரிக்கா சென்று எம்எஸ் முடித்தார்.


Microsoft நிறுவனத்தின் Microsoft Office, Xbox Live, Azure cloud platforms போன்றவற்றின் ஆரம்பகட்ட வெர்ஷனுக்கு தலைமைப் பொறுப்பு வகித்திருந்தார்.

Starbucks – லஷ்மன் நரசிம்மன்

காபி செயின் ஜாம்பவான் Starbucks அதன் புதிய சிஇஓ-வாக லஷ்மன் நரசிம்மனை நியமித்திருக்கிறது. 55 வயதாகும் லஷ்மன் நரசிம்மன் இதற்கு முன்பு Reckitt Benckiser Group PLC நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார்.

laxman narasimhan

லஷ்மன் நரசிம்மன் 1967-ம் ஆண்டு பிறந்தவர். புனேவில் பிறந்து வளர்ந்தார். புனே பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்தார். ஜெர்மன் பிரிவில் எம்ஏ முடித்தார். பென்சில்வேனியா பல்கலைக்கழக்த்தின் The Lauder Institute கல்வி நிறுவனத்தில் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் படித்தார். இவை தவிர பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தார்.

Adobe Inc – சாந்தனு நாராயண்

சாந்தனு நாராயண் ஹைதராபாத்தில் பிறந்தவர். இவரது அம்மா அமெரிக்க இலக்கியம் கற்றுக் கொடுத்தார். அப்பா பிளாஸ்டிக் பொருட்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நடத்தி வந்தவர்.

shantanu narayen

Osmania பல்கலைக்கழகத்தில் எல்க்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் முடித்த இவர் கலிஃபோர்னியா Berkeley பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தார். அத்துடன் Bowling Green State University கம்ப்யூட்டர்ஸ் சயின்ஸ் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றார்.


Apple, Silicon Graphics போன்ற நிறுவனங்களில் பொறுப்பு வகித்த பிறகு Pictra என்கிற நிறுவனத்தை நிறுவினார். 1998-ம் ஆண்டு சாந்தனு Adobe நிறுவனத்தில் சேர்ந்தார். 2005-ம் ஆண்டு அதன் சிஇஓ ஆனார். Adobe Foundation Board பிரெசிடெண்ட் ஆனார். 2011-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா இவரை மேனேஜ்மெண்ட் அட்வைசரி போர்டில் உறுப்பினராக நியமித்தார்.

Bata – சந்தீப் கடாரியா

Bata நிறுவனத்தின் 126 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் சிஇஓ ஆனார். 2020-ம் ஆண்டு சந்தீப் கடாரியா குளோபல் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.


காலணி தயாரிப்பு மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனமான Bata நிறுவனத்தின் குளோபல் சிஇஓ என்கிற பெருமைக்குரியவர் சந்தீப் கடாரியா. இந்நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவி வகித்த அலெக்சிஸ் நசார்ட் அவர்களுக்குப் பிறகு கடாரியா பொறுப்பேற்றார்.

sandeep kataria

2017-ம் ஆண்டு Bata India சிஇஓ-வாக சந்தீப் கடாரியா சேர்ந்தார். இதற்கு முன்பு Unilever, Vodafone போன்ற நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார்.

IBM – அர்விந்த் கிருஷ்ணா

2020 ஆண்டின் தொடக்கத்தில் IBM நிறுவனம் அர்விந்த் கிருஷ்ணாவை சிஇஓ-வாக நியமித்தது. ஹைதராபாத்தில் பிறந்த அர்விந்த் கிருஷ்ணா சிஇஓ-வாக நியமிக்கப்படுவதற்கு முன்பு IBM நிறுவனத்தின் Cloud and Cognitive Software துணைத் தலைவராக பதவி வகித்திருந்தார்.

arvind krishna

அர்விந்த் கிருஷ்ணா 1990-ம் ஆண்டு IBM நிறுவனத்தில் சேர்ந்தார். ஐஐடி கராக்பூரில் பட்டப்படிப்பை முடித்த பிறகு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் எல்க்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவில் பிஎச்டி முடித்தார்.

Google Cloud – தாமஸ் குரியன்

தாமஸ் குரியன் 2019-ம் ஆண்டு முதல் Google Cloud சிஇஓ-வாக பதவி வகித்து வருகிறார். இவர் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பம்பாடி கிராமத்தில் 1966-ம் ஆண்டு பிறந்தார். இவரது அப்பா கெமிக்க்ல் என்ஜினியர். தாமஸ் குரியன் நான்கு சகோதரர்களில் ஒருவர். இவரும் ஜார்ஜ் குரியனும் இரட்டையர்கள். ஜார்ஜ் குரியன் 2015-ம் ஆண்டு NetApp சிஇஓ ஆனார்.

thomas kurian

தாமஸ் குரியனுக்கு 17 வயதிருக்கையில் அவரும் ஜார்ஜ் குரியனும் அமெரிக்கா சென்றார்கள். அங்கு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தாமஸ் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றார்.


அதன் பிறகு, குரியன் McKinsey & Company நிறுவனத்தில் கன்சல்டண்டாக தனது கேரியரைத் தொடங்கினார். ஸ்டான்ஃபோர்டு கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிறுவனத்தின் எம்பிஏ முடித்தார்.


1996-ம் ஆண்டு Oracle நிறுவனத்தில் சேர்ந்தார். 2018-ம் ஆண்டு Oracle நிறுவனத்தின் பிராடக்ட் டெவலப்மெண்ட் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். 2018-ம் ஆண்டு Google கிளவுட் நிறுவனத்தில் சேர்ந்தார்.

FedEx – ராஜ் சுப்ரமணியம்

அமெரிக்காவின் பன்னாட்டு கூரியர் சேவை வழங்கும் நிறுவனம் FedEx இந்த ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜ் சுப்ரமணியத்தை அதன் சிஇஓ-வாக நியமித்திருக்கிறது. இவர் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். 1987-ம் ஆண்டு ஐஐடி மும்பையில் கெமிக்கல் என்ஜினியரிங் பிரிவில் பிடெக் முடித்தார். 1989-ம் ஆண்டு நியூயார்க் Syracuse University கல்வி நிறுவனத்தில் எம்டெக் முடித்தார்.

raj subramaniam

இவைதவிர டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் மற்றும் ஃபைனான்ஸ் பிரிவில் எம்பிஏ முடித்திருக்கிறார். 1991-ம் ஆண்டு FedEx நிறுவனத்தில் சேர்ந்தார். FedEx Corporation இயக்குநர் குழு, First Horizontal Corporation, US Chamber of Commerce, China Advisory Board, FIRST, US-India Strategic Forum, US-China Business Council போன்றவற்றில் பங்கு வகித்துள்ளார்.

Barclays – சிஎஸ் வெங்கடகிருஷ்ணன்

MIT-யில் படித்த சிஎஸ் வெங்கடகிருஷ்ணன் 2021-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி Barclays நிறுவனத்தின் முதல் கருப்பின சிஇஓ ஆனார். ஜெஸ் ஸ்டேன்லி இந்தப் பதவியை திடீரென்று ராஜினாமா செய்ததை அடுத்து சிஎஸ் வெங்கடகிருஷ்ணன் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார்.

cs venkatakrishnan

2016-ம் ஆண்டு இவர் இந்நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார். அதற்கு முன்பு JPMorgan Chase நிறுவனத்தில் இருபதாண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

Chanel – லீனா நாயர்

2021-ம் ஆண்டு பிரென்சு ஃபேஷன் ஹவுஸ் Chanel நிறுவனத்தின் முதல் பெண் சிஇஓ-வாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லீனா நாயர் இந்நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு முப்பதாண்டுகள் Unilever நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கிறார்.

leena nair

Unilever மனித வள தலைவராகவும் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

Gap Inc – சோனியா சிங்கால்

இந்தியாவின் மிகப்பெரிய ஆடை சில்லறை வர்த்தக நிறுவனமான Gap Inc 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் சோனியா சிங்காலை சிஇஓ-வாக நியமித்தது. Old Navy, Banana Republic, Athleta, Hill City போன்றவை Gap நிறுவனத்திற்கு சொந்தமான பிராண்டுகள்.

sonia singhal

சோனியா சிங்கால் இந்தியாவில் பிறந்தவர். சுஷ்மா, சத்யா சிங்கால் ஆகியோர் இவரது பெற்றோர். இவர்கள் 1971-ம் ஆண்டு கனடாவிற்கு மாற்றலாகி சென்ற சில ஆண்டுகளில் சோனியா பிறந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வியை முடித்த சோனியா 1993-ம் ஆண்டு Kettering University-ல் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்க அமெரிக்கா சென்றார். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் Manufacturing Systems Engineering சேர்ந்து 1995-ம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார்.


2004-ம் ஆண்டு சோனியா Gap நிறுவனத்தில் சேர்ந்தார். அதற்கு முன்பு Sun Microsystems நிறுவனத்தில் பத்தாண்டுகளும் Ford Motor நிறுவனத்தில் ஆறு ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார்.

Arista Networks – ஜெயஸ்ரீ உல்லல்

லண்டனில் பிறந்து டெல்லியில் வளர்ந்த ஜெயஸ்ரீ உல்லல் அமெரிக்காவின் கோடீஸ்வர தொழிலதிபர் ஆவார். 2008-ம் ஆண்டு முதல் Arista Network சிஇஓ-வாக இருந்து வருகிறார்.

jayshree ullal

சான் பிரான்சிஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்த பிறகு சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் மேனேஜ்மெண்ட் பிரிவில் முதுகலைப் படிப்பை முடித்தார். 2010-ம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் நெட்வொர்க்கிங் துறையில் முன்னணியில் இருக்கும் 5 செல்வாக்குள்ள நபர்களில் ஒருவராகத் தேர்வானார்.

NetApp – ஜார்ஜ் குரியன்

ஜார்ஜ் குரியன் ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா நிறுவனமான NetApp சிஇஓ. 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்நிறுவனத்தின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.

george kurian

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார்.

Palo Alto Networks – நிகேஷ் அரோரா

2018-ம் ஆண்டு நிகேஷ் அரோரா Palo Alto Networks தலைவர் மற்றும் சிஇஓ-வாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்பு SoftBank Group Corp. தலைவர் மற்றும் சிஓஓ-வாக பொறுப்பு வகித்திருந்தார். அதற்கு முன்பு Google Inc நிறுவனத்தில் இணைந்திருந்தார்.

nikesh arora

கூகுள் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு Duetsche Telekom AG, T-Mobile International Division பிரிவின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியாக பொறுபு வகித்தார். இவர் T-Motion PLC நிறுவனர் மற்றும் சிஇஓ ஆவார். இந்நிறுவனம் 2002-ம் ஆண்டு T-Mobile International நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது.


Northeastern University-யில் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பிரிவில் எம்எஸ் படித்தார். அத்துடன் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் நிதிப் பிரிவில் எம்எஸ் முடித்தார். நிகேஷ் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவில் பிடெக் முடித்துள்ளார்.

Micron Technology – சஞ்சய் மெஹ்ரோத்ரா

1988-ல் SanDisk இணை நிறுவனராக இருந்தவர் சஞ்சய் மெஹ்ரோத்ரா. 2016-ம் ஆண்டு வரை தலைவராகவும் சிஇஓ-வாகவும் இருந்த இவர் 2017-ம் ஆண்டு Micron Technology புதிய சிஇஓ-வாக தேர்வு செய்யப்பட்டார். 30 ஆண்டுகள் அனுபவமிக்க இவர் மிகச்சிறந்த தலைவர். இவரிடம் 70 காப்புரிமைகள் உள்ளன. Nonvolatile Memory Design, Flash Memory Systems ஆகிய பிரிவுகளில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறார்.

sanjay mehrothra

டெல்லியைச் சேர்ந்த இவர் BITS Pilani முன்னாள் மாணவர். எல்க்ட்ரிக்கல் என்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

Immarsat – ராஜீவ் சூரி

ராஜீவ் சூரி 2021-ம் ஆண்டு Immarsat நிறுவனத்தின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு 2014-ம் ஆண்டு முதல் Nokia சிஇஓ-வாக இருந்தார்.

rajeev suri

ராஜீவ் சூரி டெல்லியில் பிறந்து குவைத்தில் வளர்ந்தவர். தற்போது இவர் சிங்கப்பூர் குடிமகன்.

Deloitte – புனீத் ரஞ்சன்

2014-ம் ஆண்டு முதல் புனீத் ரஞ்சன் Deloitte சிஇஓ-வாக இருக்கிறார். இவர் ஹரியானாவில் பிறந்து வளரந்தவர். இவரது அப்பா அங்கேயே ஒரு எலக்ட்ரிக்கல் ஸ்விட்ச்கியர் தொழிற்சாலை வைத்துள்ளார்.

puneet ranjan

புனீத் ரஞ்சன் நன்றாக படிக்கவேண்டும் என்பதற்காக சிம்லாவில் உள்ள ப்ரீமியம் போர்டிங் பள்ளியில் சேர்த்தனர் இவரது பெற்றோர். 1984-ம் ஆண்டு இவர் ரோட்டரி ஸ்காலர்ஷிப் வென்ற பிறகு இவரது நிலைமை வெகுவாக மாறிப்போனது.

VMware – ரங்கராஜன் ரகுராம்

ஐஐடி மும்பையில் பட்டப்படிப்பு முடித்த இவர் Wharton டாப்பர். 2003-ம் ஆண்டு VMware நிறுவனத்தில் சேர்ந்தார்.

rangarajan raghuram

நிறுவனத்தில் ஸ்ட்ராடெஜிக் தீர்மானங்களிலும் தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியிலும் புதிய கண்ணோட்டத்துடன் பங்களித்திருக்கிறார்.

Vimeo – அஞ்சலி சூட்

2017-ம் ஆண்டு அஞ்சலி சூட் Vimeo சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு புதிய ஸ்ட்ராடெஜி திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டது.

anjali sud

இவரது பெற்றோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள். Next Gen: Hollywood Reporter 35 Under 35 பட்டியலில் இவர் இடம்பிடித்திருக்கிறார்.

Albertsons – விவேக் சங்கரன்

விவேக் சங்கரன் 1985-ம் ஆண்டு ஐஐடி மெட்ராஸில் பட்டப்படிப்பு முடித்தவர். மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

vivek sankaran

அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய மளிகை தொடர் சங்கிலி நிறுவனத்தை நடத்தி வருகிறார். தென்னிந்தியாவில் வளர்ந்தது மிகப்பெரிய அளவில் ஊக்கமளித்ததாக தெரிவித்திருக்கிறார்.

Novartis – வசந்த் நரசிம்மன்

ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் பட்டதாரியான வசந்த் நரசிம்மன் தமிழ்நாட்டைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குப் பிறந்தவர்.

vasant narasimhan

இவர் நேஷனல் அகாடமி ஆஃப் மெடிசன் செல்வாக்குள்ள உறுப்பினராகவும் உள்ளார்.

Diageo – ஐவன் மெனெசெஸ்

ஐவன் மெனெசெஸ் புனேவில் பிறந்த வளர்ந்தவர். இவர் உலகின் மிகப்பெரிய பிரிட்டிஷ் பன்னாட்டு ஆல்கஹால் நிறுவனமான Diageo சிஇஓ ஆவார்.

ivan menezes

இவரது சகோதரர் விக்டர் மெனெசெஸ் Citibank முன்னாள் சிஇஓ மற்றும் தலைவர்.

Wayfair – நீரஜ் ஷா

நீரஜ் ஷா 2002-ம் ஆண்டு ஒரு நண்பருடன் இணைந்து Wayfair நிறுவினார். இது அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக தொடர் நிறுவனங்களில் ஒன்று. இவரது பெற்றோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள்.

neeraj shah

இவர் துணிந்து ரிஸ்க் எடுப்பதற்கு இவரது பெற்றோரே ஊக்கமளித்ததாக இவர் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

OnlyFans – அம்ராபலி ‘ஏமி’ கான்

அடல்ட் கண்டெண்ட் கிரியேஷன் தளம் OnlyFans இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அம்ராபலியை சிஇஓ-வாக நியமித்துள்ளது. இவர் Red Bull, Quest Nutrition போன்ற நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார்.

amrapali gan

2020-ம் ஆண்டு இவர் சீஃப் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் அதிகாரியாக இந்நிறுவனத்தில் இணைந்துகொண்டார்.


தமிழில்: ஸ்ரீவித்யா

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற