Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

2019ல் தனி ஒருத்திகளாய் சாதித்த சிங்கப் பெண்கள்!

வாழ்க்கையில் போராடி தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட தனி ஒருத்திகள் பலரை நம் நிஜவாழ்வில் சந்திக்கிறோம். அப்படிப்பட்டவர்களில் சிலரைப் பற்றி இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம்.

2019ல் தனி ஒருத்திகளாய் சாதித்த சிங்கப் பெண்கள்!

Monday December 30, 2019 , 3 min Read

கை நிறைய சம்பளம், ஒயிட் காலர் ஜாப், 9 மணிக்குப் போனோமா 6 மணிக்கு வீட்டுக்கு வந்தோமா என பெரும்பாலானவர்களுக்கு இப்படிப்பட்ட வேலைகள் தான் மிகவும் பிடிக்கும். காரணம் புதிதாக ஒரு தொழிலை ஆரம்பித்து கையைச் சுட்டுக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. லாபமோ, நஷ்டமோ நாம் பார்க்கும் வேலைக்கு சம்பளம் கிடைத்துவிடும். அது போதும் மற்றபடி முதலாளி ஆகும் ஆசை எல்லாம் நமக்கில்லப்பா என்பது தான் வேலைக்குச் செல்லும் பலரது மைண்ட்வாய்ஸ்.


ஆனால் இவர்களில் இருந்து வேறுபட்டு, நாம் ஏன் நமது கடின உழைப்பைக் கொட்டி அடுத்தவரை மென்மேலும் பணக்காரராக்க வேண்டும். அந்த உழைப்பில் நாமே முன்னேறினால் என்ன என சிந்தித்து, துணிந்து செயல்பட்டவர்கள் தான் இன்று வெற்றி பெற்ற தொழிலதிபர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.


அதிலும் நம் சமுதாயம் எப்போதும் ஆண்கள் மீதான ஒரு பார்வையும், பெண்கள் மீதான வேறு பார்வையும் கொண்டிருக்கும். இப்படிப்பட்டச் சூழலில் தொழிலில் ஆண்களே சமயங்களில் திணறும் போது, சற்றும் சளைக்காமல் போராடி இன்று தொழில் முனைவோர் ஆகி இருக்கின்றனர் பல பெண்கள்.

பெண்கள்

அப்படிப்பட்டவர்கள் தான் தொழில் தொடங்கலாமா என மனதளவில் தயங்கிக் கொண்டிருக்கும் பலருக்கு முன்னுதாரணம். இவர்களைப் பார்த்து நிச்சயம் இன்னும் பல பெண் தொழில் முனைவோர்கள் உருவெடுப்பார்கள் என நம்பலாம்.


இதோ, 2019ம் ஆண்டின் விளிம்பில் இருக்கும் நாம், கடந்தாண்டு யுவர்ஸ்டோரி அடையாளம் காட்டிய சில சிங்கப்பெண்கள் பற்றி சற்றே திரும்பி பார்க்கலாம்...

சிங்கிள் மாம் டூ சினி ஆர்ட்டிஸ்ட்

Niranjana

காதல் திருமணம், அழகிய குடும்பம் என மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், கணவரின் மரணத்தால் நிலை குலைந்து போனவர் தான் நிரஞ்சனா. கடந்த 15 ஆண்டுகளாய், ஒற்றை மனுஷியாய் நேரம் காலம் பாராமல் கிடைக்கும் நேரங்களில் நர்சிங், மணப்பெண்களுக்கு அலங்காரம், ஏழைப் பெண்களுக்கு இலவச பியூட்டிஷியன் பயிற்சி, சினிமா செலிபிரிட்டிகளது பெர்சனல் ஹேர் ஸ்டைலிஸ்ட் என நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் நிரஞ்சனா, அறிஞர் அண்ணாவின் ஒன்னுவிட்ட பேத்தி. சிங்கிள் மாம்-ஆக இருந்து இன்று சினி மேக்கப் ஆர்ட்டிஸ்டாக உயர்ந்திருக்கும் இவரது வெற்றியின் ரகசியம் தெரிந்து கொள்ள...

ஏலக்காய் மாலையில் வாழ்க்கையை மணக்க வைத்த இந்திராணி!

Indrani

கல்லீரல் பாதிப்பால் கணவனை இழந்து, ஒற்றை ஆளாய் மகனை வளர்க்க தொழில் முனைவோர் ஆனவர் தான் இந்திராணி. வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் ஏலக்காயை மாலையாகத் தொடுத்து இன்று தனது வாழ்க்கையையும் மணக்க வைத்துள்ளார் இவர்.


இவர் கைவண்ணத்தில் உருவான மாலைகள் ஜெயலலிதா, கருணாநிதி, மோடி என தலைவர்கள் பலரது கழுத்தையும் அலங்கரித்துள்ளது. கடந்த ஆண்டு பல லட்சமக்களை ஒன்று கூட்டிய அத்திவரதரின் கழுத்தையும் இவரின் ஏலக்காய் மாலை மணக்கவைத்தது. இந்திராணியைப் பற்றி இந்தக் கட்டுரையில் மேலும் தெரிந்து கொள்ளலாம்...

ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் செல்வாம்பிகா

selvambika

வாழ்க்கையில் எவ்வளவோ கனவுகளுடனும், கற்பனைகளுடனும் வளரும் பெண்களுக்கு நிச்சயம் திருமணமும், குழந்தைப்பேறும் ஒரு திருப்புமுனையைத் தந்து விடுகிறது. அந்த சமயத்தில் தனக்கான பாதையை சரிவர அமைத்துக் கொள்ளும் பெண்கள் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் செல்வாம்பிகா. சாப்ட்வேர் எஞ்சினியரான செல்வாம்பிகா, இன்று ஈவென்ட் மேலாண்மை நிறுவனம் தொடங்கி வெற்றிநடை போடுகிறார். அவர் இந்த நிலைக்கு உயர்ந்த கதையைத் தெரிந்து கொள்ள...

மேன்பவர் ஆனந்தலட்சுமி

ananthalakshmi

கல்வி மட்டுமே எப்போதும் வெற்றியை நிர்ணயிப்பதில்லை. இதற்கு வாழும் உதாரணங்கள் பலர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ஆனந்தலட்சுமி. குடும்ப வறுமை காரணமாக ப்ளஸ்2 வரை மட்டுமே படித்த இவர், 3 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கிய நிறுவனம் இன்று ரூ. 2.20 கோடி வருமானத்துடன் 500 பெண்களுக்கு வேலைவாய்ப்பு தரும் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. 8 ஆண்டுகளில் இவரது ஏஆர் மேன்பவர் எப்படி இந்த நல்ல வளர்ச்சியை அடைந்தது என்பதைத் தெரிந்து கொள்ள....

டிஷ்வாஷ் உஷாபவன்

usha

பாத்திரம் விளக்கும் போது கைகளில் ஒட்டிக் கொள்ளும் வேதிப் பொருட்களுக்கு தீர்வு கண்டுள்ளார் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த உஷாபவன். கணிதத்தில் எம்.ஃபில். வரை படித்துள்ள இவர், கணவரின் சொந்தத் தொழிலை செய்து வருகிறார். அப்போது உதித்த யோசனையில் உருவானது தான் இவரது சாம்பல் டிஷ்வாஷ் என்ற புதுமையான யோசனை. தற்போது இதனையே தனது தொழிலாக மாற்றிக் கொண்டு மேலும் பலருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளார் உஷா.

க்வில்லிங் குணவதி

gunavathi

ஒன்றரை வயதில் போலியோ தாக்கியது சிவகாசியைச் சேர்ந்த குணவதிக்கு. இதனாலே பத்தாவது முடிந்ததும் திருமணமும் நடைபெற்றது. ஆனாலும் தன் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என முடிவு செய்த குணவதி, அதற்காக தேர்ந்தெடுத்த துறைதான் குல்லிங். இன்று அத்தொழிலில் 2 ஆயிரம் பெண்களுக்கு பயிற்சி, ஆண்டு வருமானம் 6 லட்சம் என தனது ஹாபியையே தொழிலாக்கி உயர்ந்துள்ளார் குல்லிங் குணவதி. அவர் தன் வாழ்க்கையில் உயர்ந்த கதையைத் தெரிந்து கொள்ள...