2021: கடுமையான காலத்திலும் சவாலை சமாளித்து வெற்றிப் பாதை கண்ட ‘ஸ்டார்ட் அப் நாயகர்கள்’
2020 முதல் 2021 வரையிலான சவாலான காலத்தை வென்ற ஸ்டார்ட் அப் நாயகர்கள் ஒரு பார்வை.
பெருந்தொற்று காலம் உலகப்பொருளாதாரத்தையே முடக்கிப் போட்ட நிலையில் தொழில்முனைவர்கள் அதனை எப்படி எதிர்கொண்டனர். 2020 முதல் 2021 வரையிலான சவாலான காலத்தை வென்ற 'ஸ்டார்ட் அப் நாயகர்கள்' ஒரு பார்வை.
1. 'ஸ்டார்' முதலீட்டாளர்களை ஈர்த்த குக்டு
தொடர் தொழில்முனைவரான ஈரோட்டைச் சேர்ந்த ஆதித்தியன், 2019ம் ஆண்டில் புதிய முயற்சியை கையில் எடுத்தார். தினசரி சமையலை எளிதாக்க குறிப்புகளை வீடியோ வடிவில் சமூக வலைதளம் மற்றும் ஆப் மூலம் வழங்கும் சமையல் தளமான ‘Cookd' ஐ தொடங்கினார்.
படித்தது என்ஜினியரிங்காக இருந்தாலும் பிடித்தது சமையல் கலை என்பதால் படிக்கும் காலம் தொட்டே இத்துறையில் அனுபவத்தை வளர்த்துக் கொண்டார். அந்த அனுபவமும் சேர்ந்ததால் நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் கதிர் ஆகியோர்களின் முதலீடுகள் உள்பட சமீபத்தில் ரூ.4.4 கோடி ரூபாய் நிதி திரட்டி இருக்கிறது இந்த ஸ்டார்ட் அப்.
Cookd நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு இதைப் படியுங்கள்:
2. தமிழக அரசின் ரூ.60 லட்சம் கொடை பெற்ற சென்னை ஸ்டார்ட்-அப்
சென்னையைச் சேர்ந்த ஐஓடி நிறுவனமான 'அட்சுயா டெக்னாலஜீஸ்' 'Atsuya Technologies' தமிழக அரசின் ரூ.60.4 லட்சத்துக்கான கொடையை பெற்றிருக்கிறது. உணவு சார்ந்த துறையில் குளிர்சாதனம் அல்லது வெப்பநிலை கண்காணிக்கப்பட வேண்டிய இடங்களில் அட்சுயாவின் 'ஐஓடி' கை கொடுக்கிறது.
ஒரு ரீடெய்ல் ஸ்டோரில் இரவு குளிர்சாதன பெட்டியில் கோளாறு ஏற்பட்டுவிட்டது என்றால் அது என்ன பிரச்சினை என்பதை அறிந்து சம்பந்தப்பட்ட ஸ்டோர் நிர்வாகிக்கு தகவல் கொடுக்கும். இதன் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கையை ஸ்டோர் மேனேஜர் உடனடியாக எடுப்பார். இந்தக் கருவியினால் உணவு வீணாவது தடுக்கப்படுகிறது.
அட்சுயா நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு கீழே லின்கில் படியுங்கள்:
3. சிலைகளில் கொட்டிக் கிடக்கம் வாய்ப்புகள்
ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரி மாணவரான அருண் டைட்டன், ஜோஹோ நிறுவனத்தில் அனிமேஷன் பிரிவில் பணியாற்றியவர். ஸ்ட்ரீட் போட்டோகிராபி, கேன்டிட் போட்டோகிராபி என்று பல்கலைஞராகத் திகழ்ந்தவர், பணியை விட்டு தனக்கான அடையாளத்தை தேடித் தொடிங்கினார்.
முடிவில் சிலைகளில் பல கோடி ரூபாய் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து தற்போது ஆன்லைனிலும் நேரடியாகவும் தலைவர்களின் உருவங்களை தத்ரூபவமாக செதுக்கி விற்பனை செய்யும் நிறைவான தொழிலை செய்து வருகிறார்.
‘சிலை’யின் வெற்றிக்கதையை முழுவதமாக தெரிந்து கொள்வதற்கு இதைப் படியுங்கள்:
4. ரூ.1 கோடி வருவாய் ஈட்டும் நாகர்கோவில் டெக் ஸ்டார்ட்-அப்!
டெக்னாலஜி நிறுவனத்தை எந்த ஊரில் தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல இலக்கை யார் அடைகிறார்கள் என்பதே முக்கியம். இதனை நிரூபித்திருக்கிறது நாகர்கோவிலில் இருந்து செயல்படும் 'FinOS Technologies' 'ஃபின்ஓஎஸ் டெக்னாலஜீஸ்.'
கூட்டுறவு வங்கிகளுக்கு பிரத்யேகமான மென்பொருள் தயாரிப்புடன் தொடங்கிய இந்நிறுவனத்தில் சர்வதேச அளவில் 11 நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
Finos technologies பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு இதைப் படியுங்கள்:
5. உழவர்களின் நண்பன் bemarket!
விவசாயக் குடும்பப் பின்னணியைக் கொண்ட விழுப்புரத்தைச் சேர்ந்த சக்திவேல் கோவிந்தராஜன், அதே விவசாயிகளின் நன்மைக்காக தொடங்கிய ஸ்டார்ட் அப் ’bemarket’. இடைத்தரகர்களின்றி விவசாயிக்கு லாபம் வாடிக்கையாளர்களுக்கு நல்ல ஆரோக்கியம் என்பதை மட்டுமே நோக்கமாக வைத்து செயல்படும் பசுமை சந்தை.
bemarket பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு இதைப் படியுங்கள்:
6. நிறுவனங்களுக்கு நேர்காணல் பலுவை குறைக்கும் 'InterviewDesk'
ஆட்கள் பற்றாக்குறையை சரிசெய்தல் என்பது டெக்னாலஜி நிறுவனங்களுக்கு தனி பணிப்பளு. இந்தப் பளுவை குறைத்து அவர்களுக்கான நேர்காணலை தகுதி வாய்ந்த உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து கொடுக்கும் பணியைச் செய்வதே 'Interview Desk' ஸ்டார்ட் அப்’பின் பணி.
பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தின் பலனாக 2017ல் இந்த ஸ்டார்ட் அப்’பை தொடங்கி 25,000க்கும் மேற்பட்ட நேர்காணல்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார் பிச்சுமணி துரைராஜ். Interview Desk பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு இதைப் படியுங்கள்:
7. ஜீரோ டூ 2 நிறுவனங்கள் நிறுவிய நெல்லை இளைஞர்!
திருநெல்வேலியைச் சேர்ந்த பயோடெக் என்ஜினியரான தங்கவேல் புகழ் தந்தையின் கனவை நினைவாக்க தொழில்முனைவு களமிறங்கினார். திருநெல்வேலி டூ சிலிக்கான்வேலி என்பதை தனது லட்சியமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியவர், தமிழகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான தொழில் முனைவோர்களுக்கு அவர்களின் தொழிலை பதிவு செய்ய, லோகோ உருவாக்க, இணைய தள பக்கம் உருவாக்க, அவர்களின் கணக்கு வழக்குகளை பராமரிக்க என வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார்.
இவரின் ‘DigiNadu’, ’TaxNadu’ பற்றி முழுவதமாக தெரிந்து கொள்வதற்கு இதைப் படியுங்கள்:
8. சுற்றுலாத் துறையில் கார்த்திக் சாதித்தது எப்படி?
கல்லூரி நாட்களில் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து கொடுத்து, பின்னர் அதையே தொழிலாக்கி இயக்குகிறார் தொழில்முனைவர் கார்த்திக் மணிகண்டன். இன்று கொரோனா முடக்கம், வருமானமின்மை என பல இடர்களைத் தாண்டி வெற்றிகரமாக ’ஜிடி ஹாலிடேஸஸ்’ ரூ.90 கோடி வருமானம் ஈட்டும் தொழிலாக புதுமைகள் பலவற்றை புகுத்தி வெற்றிகளை குவித்து வருகிறார்.
கார்த்திக் மணிகண்டன் எதிர்கொண்ட தொழில்முனைவு சவால்களை முழுவதுமாக தெரிந்து கொள்ள இதைப் படியுங்கள்:
9. ஸ்டார்ட்-அப் விருது பெற்ற நிறுவனம் தொடங்கிய முன்னாள் இஸ்ரோ ஊழியர் தினேஷ் கனகராஜ்!
ஐஐடி-யில் ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங் முடித்துவிட்டு, இஸ்ரோ-வில் பணியில் இருந்த தினேஷ் கனகராஜ், கார்பன் ஃபைபர் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கி ஸ்டார்ட்-அப் இந்தியா விருது வாங்கி பிரதமருடன் உரையாடி பாராட்டைப் பெற்றிருக்கிறார்.
குறைந்த எடையும், அதிக உறுதியும் கொண்ட மெட்டிரீயல் தான் கார்பன் ஃபைபர் (Carbon fibre). பல மடங்கு எடை குறைவாகவும் ஸ்டீலை விட பல மடங்கு உறுதி உடையது கார்பன் ஃபைபர். ஃபேப்ஹெட் மூலம் இதுவரை கைவினைப் பொருட்களைப் போல இருந்த கார்பன் ஃபைபர்களை வெற்றிகரமாக 3டி பிரிண்டிங் மூலம் கொண்டுவந்து ட்ரோன், பாதுகாப்பு உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களை வழங்கி வருகிறார்.
இளம் வயதில் வென்றுள்ள அவரின் வெற்றிக்கதையை முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு இதனைப் படியுங்கள்:
10. வாடிக்கையாளர்களே பேரம் பேசி பொருள் வாங்க சென்னை நண்பர்கள் தொடங்கிய தளம்
ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதற்கு முன் பல விற்பனையாளர்களிடம் இருந்து விலைப்பட்டியலை வாங்கிவிட்டு, குறைவான விலையில் தருபவரிடம் ஏலம் முறையில் வாங்க உதவுகிறது ஆன்லைன் தளம் ‘Jinglebid'.
சென்னையைச் சேர்ந்த நண்பர்களான கிருஷ்ணன், சுதர்சன் இருவரும் இணைந்து JingleBid நிறுவனத்தை நிறுவியுள்ளனர். இந்தியர்களுக்காகவே தொடங்கப்பட்ட இந்தத் தளம் 35000-க்கும் அதிகமான பயனர்களும் 1,200-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுடன் திறம்பட செயல்பட்டு வருகிறது.
Jinglebid பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு இதைப் படியுங்கள்: