Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

20 மில்லியன் பயனர்களை சேவை அளிப்போருடன் இணைக்கும் சென்னை நிறுவனம் ’சுலேகா’

2007-ம் ஆண்டு சுலேகா நிறுவனத்தை துவங்கிய சத்யா பிரபாகர் வாடிக்கையாளர்களையும் சேவை வழங்குவோரையும் இணைக்கும் உள்ளூர் சேவைகளுக்கான முழுமையாக டிஜிட்டல் தளமாக இதை உருவாகியுள்ளார்.

20 மில்லியன் பயனர்களை சேவை அளிப்போருடன் இணைக்கும் சென்னை நிறுவனம் ’சுலேகா’

Wednesday July 03, 2019 , 5 min Read

முன்பெல்லாம் நம்மில் பெரும்பாலானோர் வீட்டில் தடிமனான யெல்லோ பேஜஸ் புத்தகத்தை வைத்திருப்போம். இதில் ஆயிரக்கணக்கான உள்ளூர் ப்ளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள், ஆசிரியர்கள், பழுது பார்க்கும் சேவையளிக்கும் நிறுவனங்கள் என ஏராளமான தகவல்கள் பட்டியலிடப்பட்டிருக்கும்.


ஆனால் இணையம் மற்றும் டிஜிட்டல் மீடியத்தின் வருகையால் இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆன்லைனில் பட்டியலிடப்படுகிறது. 2019-ம் ஆண்டு ஜனவர் மாதம் முதல் யெல்லோ பேஜஸ் அச்சு வடிவிலான புத்தகத்தை நிறுத்திக்கொண்டு டிஜிட்டலில் செயல்படும் என்று 2017-ம் ஆண்டு ’தி கார்டியன்’ தகவல் வெளியிட்டது.


இந்த மாற்றத்தை வெகு நாட்களுக்கு முன்னரே உணர்ந்திருந்தார் சென்னையைச் சேர்ந்த தொழில்முனைவரான சத்யா பிரபாகர். பத்தாண்டுகளுக்கு முன்னரே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 2007-ம் ஆண்டு ’சுலேகா’ (Sulekha) என்கிற டிஜிட்டல் தளத்தை உள்ளூர் சேவைகளுக்காகத் துவங்கினார்.


மக்கள் ஆன்லைனில் அதிக சேவைகளைத் தேடத் துவங்கிய நிலையில் முழுமையான சேவைகளை வழங்கும் தளமாகவும் பல மில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாகவும் சுலேகாவை உருவாக்கியுள்ளார் சத்யா.

1
”எங்களது வருவாய் குறித்த தகவல்களை நாங்கள் பகிர்ந்துகொள்ளவில்லை. ஆனால் விரைவாக வளர்ச்சியடைந்து குறிப்பிடத்தக்க வகையில் வருவாய் ஈட்டி வருகிறோம். மேலும் 2019 நிதியாண்டில் வட்டி, வரி, தேய்மானம் உள்ளிட்ட EBITDA லாபகரமாகவே உள்ளது,” என்றார் சத்யா.

கடந்த மூன்றாண்டுகளில் சுலேகா தளம் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் சத்யா. சென்னையில் இந்நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. இது தவிர அமெரிக்கா மற்றும் கனடா பகுதிகளுக்கான செயல்பாடுகளுக்கு ஆஸ்டின் மற்றும் டெக்சாஸ் பகுதியில் இருந்தும் இந்நிறுவனம் இயங்கிறது.

இந்த டிஜிட்டல் சேவை தளம் தற்போது ஒரு ஆண்டிற்கு 20 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. கட்டண அடிப்படையில் 70,000-க்கும் மேற்பட்ட சேவை பார்ட்னர்கள் உள்ளனர்.

Norwest Venture Partners (சிலிக்கான் வேலி), Mitsui Corporation (டோக்கியோ), GIC (சிங்கப்பூர்) உள்ளிட்டோர் சுலேகாவின் முதலீட்டாளர்கள். எஸ்எம்பிஸ்டோரி உடனான பிரத்யேக உரையாடலில் சுலேகா நிறுவனர் மற்றும் சிஇஓ சத்யா பிரபாகர் பிராண்டின் செயல்பாடுகள் குறித்தும் அதன் வெற்றிக்கதை குறித்தும் விவரித்தார்.


அந்த உரையாடலின் தொகுப்பு இதோ:


எஸ்எம்பிஸ்டோரி: சுலேகாவில் ஒருவர் எத்தகைய சேவைகளைப் பெறலாம்?


சத்யா பிரபாகர்: சுலேகா ஒவ்வொரு நகரிலும் ஆயிரக்கணக்கான நிபுணர்களின் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. வெவ்வேறு பிரிவுகளில் செயல்படும் இவர்கள் தங்களது ஐம்பது சதவீத வணிகங்களுக்கு சுலேகாவையே சார்ந்துள்ளனர். பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ், பூச்சி ஒழிப்பு, SAP பயிற்சி, பிக் டேட்டா பயிற்சி, செக்யூரிட்டி சேவை வழங்குவோர், சிசிடிவி நிறுவுதல், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற பல்வேறு பிரிவுகள் இதில் அடங்கும்.

வாடிக்கையாளர்களைப் பெறுதல் அல்லது தக்கவைத்தல், சேவை வழங்குவோர் அல்லது நிபுணர்களைப் பெறுதல் மற்றும் தக்கவைத்தலைப் பொறுத்தவரை எங்களது டிஜிட்டல் அளவுகோல் மதிப்பீட்டின்படி சுலேகா இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.

எஸ்எம்பிஸ்டோரி: சுலேகா டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு செயல்படுகிறது?

சத்யா பிரபாகர்: 2015-ம் ஆண்டிற்கு முன்பு சுலேகாவில் ஆன்லைனில் பட்டியலிடப்படும் சேவை வழங்கப்பட்டு வந்தது. இது கிட்டத்தட்ட ஆன்லைன் யெல்லோ பேஜஸ் போன்றது. இது இந்தியா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள பல்வேறு உள்ளூர் வணிகங்களுடன் வாடிக்கையாளர்கள் இணைய உதவியது.


எனினும் 2015-ம் ஆண்டு உள்ளூர் சேவைகளுக்கான முழுமையான டிஜிட்டல் தளமாக உருவானது. இதில் சேவை தேவைப்படும் வாடிக்கையார்களும் சேவை வழங்குபவரும் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டனர். சேவை வழங்கும் பார்ட்னர்களும் வணிக செயலி வாயிலாகவே இணைக்கப் படுகின்றனர். இதனால் சுலேகா சுமார் 1,200 வெவ்வேறு பிரிவுகளின்கீழ் எழும் தேவைகளை கண்காணிக்க முடிகிறது. மேலும் வாடிக்கையாளர்களும் சேவை வழங்கும் பார்ட்னர்களும் தொடர் கேள்விகள் வாயிலாகவும் செயற்கை நுண்ணறிவு வாயிலாகவும் இணைக்கப்படுகின்றனர்.

2

எஸ்எம்பி ஸ்டோரி: இது எப்படி சுலேகாவை தனித்தன்மை வாய்ந்ததாக மாற்றுகிறது?


சத்யா பிரபாகர்: எங்களது தளம் பல்வேறு பிரிவுகளுக்கான சேவைகளை உள்ளடக்கியுள்ளது. மென்பொருள், சேவை வழங்குவோரையும் தேவை இருப்போரையும் இணைத்தல், வணிக செயலி, தேவை பூர்த்திசெய்யப்படுவதை கண்காணித்தல் என முழுமையாக செயல்படுகிறது.

சுலேகா பல்வேறு சேவைகளை வழங்கி ஒவ்வொரு வாடிக்கையாளரும் எங்களது தளத்தை ஒரு ஆண்டிற்கு மூன்று முதல் நான்கு முறை பார்வையிட வைக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களைக் கையகப்படுத்துவதற்கான செலவுகள் பல்வேறு சேவைகளின் மூலம் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

எஸ்எம் பிஸ்டோரி: உங்களது போட்டியாளர்கள் யார்?


சத்யா பிரபாகர்: துணை ஒப்பந்ததாரர்கள் மூலம் குறைந்த மதிப்புடைய சேவைகளை வழங்கும் Mr Right, Urbanclap போன்ற நிறுவனங்கள் செயல்படுகின்றன. எனினும் நிபுணத்துவ சேவைகளுக்கு இத்தகைய நிறுவனங்களுடன் சுலேகா போட்டி இடவில்லை. ஆன்லைனில் சேவைகளை பட்டியலிடும் கூகுள் லோக்கல் சேர்ச், ஜஸ்ட் டயல் போன்ற நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை சேவை வழங்குவோருடன் இணைக்கிறது. ஆனால் சேவை பார்ட்னர்கள் அல்லது நிபுணர்கள் மிகப்பெரிய அளவில் தொடர்பில் இணைந்திருப்பதில்லை.

சுலேகா தரமான நிபுணத்துவ சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. சேவை வழங்குவோரை வாடிக்கையாளர்களுடன் இணைக்கும் திறன், வாடிக்கையாளர்களை கையகப்படுத்தும் திறன் மற்றும் தக்கவைத்துக்கொள்ளும் திறன் ஆகியவற்றின் மூலம் தரமான சேவையளிப்பதில் கவனம் செலுத்துகிறது.

எஸ்எம்பி ஸ்டோரி: சுலேகா தன்னை சந்தைப்படுத்திக்கொள்ள டிஜிட்டல் முறையை எவ்வாறு பயன்படுத்திக்கொள்கிறது?


சத்யா பிரபாகர்: “நிபுணர்களை விரைவாகவும் இலவசமாகவும் பெறுவதற்கான வழி” என்பதே சுலேகாவின் புதிய டேக்லைனாக இருக்கும். இதை பல கோடி ஆன்லைன் பட்ஜெட்டுடன் விளம்பரப்படுத்தி வருகிறோம்.


ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகுள் போன்றவற்றைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை சர்வீஸ் பார்ட்னர்களையும் பெறுகிறோம். ஒரு ஆண்டில் கூகுளின் பல்வேறு தேடல்கள் மற்றும் வீடியோ தளங்களில் அதிகம் செலவிடும் முன்னணி 100 நிறுவனங்களில் சுலேகா இடம்பெற்றுள்ளது. இதனால் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெறுகிறோம்.

3

எஸ்எம்பி ஸ்டோரி: சுலேகாவின் பயணத்தில் முக்கிய மைல்கற்கள் யாவை?


சத்யா பிரபாகர்: சிங்கப்பூர் இறையாண்மை நிதியத்தின் மூலம் சீரிஸ் சி சுற்றாக பெறப்பட்ட 28 மில்லியன் டாலர் தொகையை உள்ளூர் சேவைகளுக்கான டிஜிட்டல் தளத்தை புதுமையாக உருவாக்கவும் முன்பிருந்த ஆன்லைன் பட்டியலிடும் சேவையில் இருந்து மாறவும் சுலேகா பயன்படுத்திக்கொண்டது.


சேவை தொடர்பான வாடிக்கையாளர்களின் விசாரணைகளுக்கு சேவை வழங்கும் பார்ட்னர்கள் அல்லது நிபுணர்கள் எஸ்எம்எஸ் வாயிலாக டெலிவர் செய்து வந்தனர். இவ்வாறான சுமார் 50,000 பார்ட்னர்கள் அல்லது நிபுணர்களை வணிக செயலிக்கு மாறச் செய்தது சுலேகாவின் மற்றுமொறு மிகப்பெரிய மைல்கல் ஆகும். இதனால் சேவை வழங்கும் பார்ட்னர்கள் தங்களது செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கமுடிவதால் இது புதுமையான முயற்சியாக கருதப்பட்டது.


சேவை வழங்கும் சுமார் 95 சதவீதத்திற்கும் அதிகமான பார்ட்னர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது அடுத்த மைல்கல்லாகும். இவர்கள் அனைவரும் சுலேகா வணிக செயலி மூலம் பலனடைந்தவர்கள்.

எஸ்எம்பி ஸ்டோரி: டிஜிட்டல் சேவை தளத்தை இயக்குவதில் உள்ள முக்கிய சவால்கள் என்ன?


சத்யா பிரபாகர்: சுலேகாவின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரை அமெரிக்க வணிகங்களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பல்வேறு சவால்களை சந்திக்க நேர்ந்தது.


வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட பட்டியல்களும் விளம்பரங்களும் அவர்களது தேவையை பூர்த்திசெய்வதை நாங்கள் உறுதிசெய்யவேண்டியிருந்தது. அனைத்து விளம்பரங்களுக்கும் நாங்களே பொறுப்பேற்கவேண்டியிருந்ததால் சவால் நிறைந்ததாகவே காணப்பட்டது.


உதாரணத்திற்கு வாடிக்கையாளர் அழைத்த இரண்டு மணி நேரத்திற்குள் பெரும்பாலான நிபுணர்கள் சரியான விலைப்புள்ளியை வழங்குவதை சுலேகா உறுதி செய்யவேண்டியிருந்தது.

தேர்வுசெய்யப்பட்ட நிபுணர் வாடிக்கையாளரின் திருப்திக்கேற்ப பணியை நிறைவு செய்வதையும் நாங்கள் உறுதிசெய்யவேண்டும். குறைவான எண்ணிக்கையுடன் இருந்த கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுடன் செயல்படத் துவங்கி 70,000-க்கும் அதிகமான சிறு வணிக வாடிக்கையாளர்களைப் பெறவேண்டியிருந்தது.


இந்த ஒவ்வொரு மாற்றத்திற்கும் செயல்முறை, அமைப்பு, ஊழியர்கள் என பல நிலைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டியிருந்தது. இவை அனைத்தையும் பெரியளவில் செய்வது கடினமாக இருந்தது. ஆனால் இது நிறுவனத்தின் விரைவான வளர்ச்சிக்கு உதவியது.


எஸ்எம்பி ஸ்டோரி: நிறுவனத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?


சத்யா பிரபாகர்: தற்சமயம் சுலேகாவின் 85% வருவாய் அதன் தொடர் சேவை பார்ட்னர்கள்/நிபுணர்கள் மூலம் பெறப்படுகிறது. இதுவே வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் எங்களது திறனுக்கு அத்தாட்சியாகும்.

நாங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைய விரும்புகிறோம். பிராண்டை உருவாக்குவதற்கும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைத் தாண்டி சேவையளிப்பதற்கும் செலவிட்டு முக்கியச் செயல்பாடுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் எங்களது செயல்பாடுகளை அதிகரிக்க விரும்புகிறோம்.

யூகே, மலேசியா, சிங்கப்பூர், யூஏஈ, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் சுலேகா வளர்ச்சியடைந்து வருகிறது. நிதி, காப்பீடு போன்ற பிற சேவைகளையும் இணைத்து மதிப்பு கூட்ட விரும்புகிறோம்.


ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா