'ஆசிரியர் தினம்’ - மாணவர்களுக்காக வாழ்க்கையை அற்பணித்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

By Induja Raghunathan|5th Sep 2020
தங்கள் கற்பித்தலில், அணுகுமுறையில் புத்தாகங்களைப் புகுத்தி மாணவர்களைன் மேம்பாட்டிற்கு பெரிதும் பாடுபட்டுள்ள ஆசிரியர்களை இந்த ‘ஆசிரியர் தினத்தில் நினைவுக் கொண்டு போற்றுவோம்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

செப்டம்பர் 5ம் தேதி வருடாவருடம் ‘ஆசிரியர் தினம்’ வெகுச்சிறப்பாக கொண்டாடப்படும் நாள். இந்நாளை பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் குதூகலமாகக் கொண்டாடி, தங்களின் அன்பு ஆசிரியர்களுக்கு பரிசுகள், பூக்கள், என தங்களுக்குப் பிடித்தவற்றை கொடுத்து மரியாதையும், நன்றிகளையும் தெரிவிப்பது வழக்கம்.


அந்த வகையில் இந்தாண்டு செப்டம்பர் 5ம் தேதி சற்று புதியமுறையில் கொண்டாடப்படுகிறது. கொரோனாவால் தொடரும் ஊரடங்கால் சுமார் 6 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து இத்தனை மாதங்கள் பள்ளிகள் இயங்காமல் இருப்பது இதுவே முதல்முறையாக ஆகும்.


பொதுவாக பள்ளிக்குச் செல்ல குழந்தைகள் அடம்பிடித்தாலும், அவரவர்களுக்கென செல்லமான, பிரியமான ஆசிரியர்கள் என நிச்சயம் இருப்பார்கள். அவர்களைக் காண, அவர்களின் வகுப்புகளுக்காக பள்ளிக்கு ஆர்வமாக செல்வார்கள் மாணவர்கள். ஆனால் தற்போது இது எதுவும் சாத்தியமற்ற சூழலில், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள், வாட்ஸ்-அப் காலில் சந்தேகங்கள் என அந்தந்த பள்ளிகள் தங்களால் முடிந்தவற்றை செய்து மாணவர்களின் கல்வி தடைப்பெறாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


லாக்டவுன் என்ற இந்த சவாலான சூழலில் எல்லா ஆசிரியர்களும் தங்களால் முடிந்த முயற்சியை எடுத்து மாணவர்களுடன் தொடர்பில் இருந்து பள்ளிக்கூடம் இல்லாத வெறுமையை போக்கிவருவதை பார்க்கின்றோம். ஆனால் இங்கு சில ஆசிரியர்கள் எப்போதுமே மற்றவர்களைவிட ஒருபடி மேல் போய் தங்கள் கற்பித்தலில், அணுகுமுறையில் புத்தாகங்களைப் புகுத்தி மாணவர்களைன் மேம்பாட்டிற்கு பெரிதும் பாடுபட்டுள்ளனர். அத்தகைய ஆசிரியர்களை இந்த ‘ஆசிரியர் தினத்தில் நினைவுக் கொண்டு போற்றுவோம்.

பள்ளிக்கு சுவர் முதல் ஸ்மார்ட் கிளாஸ் வரை அமைத்த திலீப் ராஜு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் எனும் கிராமத்தில், சுமார் 840 மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணி புரிந்து வருகிறார் திலீப் ராஜு. இவருக்கும் இந்தாண்டு தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது. 40 வயதே ஆகும் இவருக்கு இந்த அங்கீகாரம் இத்தனை சீக்கிரம் கிடைக்க இவரது பணிகளே சான்று.


தனது தனித்துவமான கற்பித்தல் பாணியால் தன்னிகரற்ற ஆசிரியப் பணிக்கு பெருமை சேர்த்துள்ள ஆசிரியர் திலீப், முதன்முதலாக, 2000ம் ஆண்டு பெரிய நொளம்பை என்னும் இடத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். வீட்டில் இருந்து 60 கி.மீ. தொலைவில் அப்பள்ளி இருந்ததால், தினமும் மூன்று பேருந்துகள் மாறி, அங்கிருந்து 3 கி.மீ. நடந்து சென்று பள்ளியை அடைவார். மாணவர்களின் நலனில் அக்கறைக் கொண்ட இவர், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

dhilip

தான் பணிபுரிந்த பள்ளிக்கு சொந்த செலவில் சுவர் அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஆங்கிலத்தை எளிமையாக கற்றுக் கொடுக்க பல புதியமுறைகளை அறிமுகப்படுத்தி, தன் பள்ளி மாணவர்களை தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக பல போட்டிகளில் வெல்லச் செய்துள்ளார் திலீப். கணினி பயன்பாடு, ஸ்மார்ட் கிளாஸ் என தன் பள்ளிக் குழந்தைகளை அனைத்திலும் அப்டேடட்டாக வைத்திருக்கும் பெறுமை இவரைச் சாறும்.


திலீப் பற்றி மேலும் தெரிந்துள்ள: பள்ளிக்கு சுவர் முதல் ஸ்மார்ட் கிளாஸ் வரை; தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்!

வேம்பென கசக்கும் ஆங்கிலத்தை, அமிர்தமாக்கிய இவாஞ்சலின் பிரிசில்லா

ஆங்கிலம் என்றாலே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேம்பாக கசக்கும், அம்மொழில்யின் மீது ஈர்ப்பு ஏற்படுத்துவதற்காக, பாடங்களை, மெட்டோடு பாட்டாக பாடி, கற்பித்தலை ஓர் மகிழ்ச்சியான நிகழ்வாக மாற்றியுள்ளார் பிரிசில்லா.


இவர், தேசிய கீதத்தை தமிழில் பாடி, அதை 3 நாள்களில் 6 மில்லியன் பேரை பார்க்க வைத்த சாதனைக்குச் சொந்தக்காரர். அதுமட்டுமின்றி, ஆங்கிலம் தெரியவில்லை என்ற ஓர் காரணத்தினால், தாழ்வுமனப்பான்மையால் எந்த மாணவனின் முன்னேற்றமும் தடைபட்டுவிடக் கூடாது என்பதால், தினசரி தான் ஆங்கிலப் பாடம் நடத்தும்போது, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பாக ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளையும் நடத்துகிறார்.

Prisilla

1994ல் இருந்தே தனியார் பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றிய பிரிசில்லா, 2001ல் ஏற்காட்டில் உள்ள மலைவாழ் மக்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார். 2014ஆம் ஆண்டு முதல் அவினாசி அந்தியூர் சாலையில் உள்ள சேயூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.


ஆங்கிலம் கற்பித்தல் மட்டுமன்றி மாணவர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் திறமை இருக்கவேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு பொது அறிவு, நாட்டு நடப்புகள், உலக விஷயங்களையும் கற்றுத் தருகிறார்.


இவாஞ்சலின் பிரிசில்லாவின் முழு கதையை படிக்க: வேம்பென கசக்கும் ஆங்கிலத்தை, அமிர்தமாக்கி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புகட்டும் கோவை ஆசிரியை...


வீடு வீடாகச் சென்று குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பக் கோரிய தலைமை ஆசிரியர் ஸதி

2018ல் தமிழகத்தில் இருந்து, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஒரே ஆசிரியர் ஸதி. இவர் கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.


ஆசிரியை ஸதியின் பூர்வீகம் கோத்தனூர். கல்விப் பணியில் இருந்த அப்பாவின் ஆசையைத் தொடர்ந்து ஸதியும், 1995ம் ஆண்டு டிஆர்பி (ஆசிரியர் தகுதித் தேர்வு) எழுதி,  சின்னமநாயக்கன்பாளையாம் கிராம அரசுத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஆனார். அதன் தொடர்ச்சியாக சில பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற்ற இவர், கடந்த 2009ம் ஆண்டு தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்றார்.

Sati

பின்னர் 2012ம் ஆண்டு மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றலானார். இப்பள்ளிக்கு அவர் வந்தபோது, 146 மாணவ, மாணவிகள் மட்டுமே அங்கு படித்து வந்துள்ளனர். பின்னர் ஸதியின் தீவிர முயற்சியால் இந்த எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.


இதற்காக வீடு வீடாகச் சென்று குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும்படி கோரியுள்ளார் ஸதி. மாணவ, மாணவியருக்கு அரசு வழங்கும் உதவிகள், சலுகைகள் குறித்தும், படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசி, அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தியுள்ளார்.


தலைமை ஆசிரியர் ஸதி தன் மாணவர்களை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துவந்து ஊக்கப்படுத்திய முழு விவரம்: தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தில் இருந்து தேர்வான ஒரே ஆசிரியை!

மாணவர்களின் மனதை வென்ற ஆசிரியர் பகவான்!

புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்ய வைத்து வார்த்தை மாறாமல் விடைத்தாளில் கொட்டப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் மத்தியில், தகப்பனாய், ஆசனாய், தோழனாய் இருக்கும் ஆசிரியர் தான் பகவான்.


திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த பொம்மராஜ்பேட்டை கிராமத்தைத் சேர்ந்தவர் பகவான். அரசு பள்ளிகளிலே பள்ளிப் படிப்பை முடித்து, திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம் பட்டம் பெற்றவர். பி.எட் படிப்பு படித்துக்கொண்டிருந்த போதே ஆசிரியர் போட்டி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 2014ம் ஆண்டு வெளியகரம் அரசினர் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியைத் தொடக்கியுள்ளார்.

பகவான்

மாணவர்களுடன் பகவான்

2018ல் இவருக்கு இடமாற்றம் ஆர்டர் வந்து, அப்பள்ளியை விட்டு வேறு பள்ளி செல்ல உத்தரவு வந்தது. மற்றொரு பள்ளிக்கு பணியிடமாற்றத்தில் செல்வது தெரிந்த பகவான், தன் பாசமான பள்ளி மாணவ, மாணவிகளை பிரிந்து செல்ல மனவருத்தத்துடன் பணியிடமாற்ற ஆர்டரை வாங்க பள்ளிக்குச் செறார். அவர் சற்றும் எதிர்ப்பாராத வகையில், மாணவர்கள் அவரை போகவிடாமல் கட்டிப்பிடித்து பகவானை போகவிட்டாமல் தடுத்து, அழத்தொடங்கினார்கள். இந்த காட்சி மற்றும் புகைப்படங்கள் வைரலாக பகவான் ஆசிரியரின் பெருமை தமிழகம் எங்கும் பரவியது.


மாணவர்களால் அன்பாக பார்க்கப்பட்ட பகவான் பற்றிய முழுக் கதை: 'எனக்கான பொறுப்புகள் அதிகமாகி உள்ளது’- மாணவர்களின் மனதை வென்ற ஆசிரியர் பகவான்!

அக்கறை மிக்க தலைமை ஆசிரியை மகேஸ்வரி கல்பனா

மற்ற அரசு பள்ளிகளைப் போல தான் இந்த பள்ளியிலும் மாணவர்கள் வருகை தான் மிக முக்கிய பிரச்சினையாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பள்ளியில் மாணவர் வருகை என்பது மிகக்குறைவு. இதைத்தடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார் பள்ளியின் தலைமை ஆசிரியை மகேஸ்வரி கல்பனா.


ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய தலைமை ஆசிரியரின் கீழ் அதே அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து நடத்தும் இந்த பள்ளியில், மாணவர்கள் வருகையை அதிகப்படுத்துவது, அவர்களை தனித்துவம் மிக்கவர்களாக உருவாக்குவது என்ற நோக்கத்துடன் அனைவரும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சரஸ்வதி

தலைமை ஆசிரியை கல்பனா தலைமையிலான ஆசிரியர்க்குழு மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவர்களது பிள்ளை ஏன் பள்ளிக்கு வரவில்லை என விசாரித்து அவர்களை பள்ளிக்கு வரச் செய்தார்.


மாணவர்களின் பெற்றோர் எப்போது வேண்டுமானாலும் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரை உள்ளிட்டவர்களை பார்த்து, தங்கள் பிள்ளையின் படிப்பு நிலவரம் குறித்து அறியும் வகையிலான வசதிகள் செய்யப்பட்டன. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் இடையிலான இடைவெளி குறைந்தது.


சென்னை அரசுப் பள்ளியில் அக்கறை மிக்க தலைமை ஆசிரியை ஏற்படுத்திய வியக்கத்தகு மாற்றம்!

மாணவர்களுக்கு டீ, ஸ்நாக்ஸ், வாங்கித் தந்து தேர்வுக்கு தயாராக்கிய ஆசிரியை

மாலை நேரத்தில் கூடுதல் நேர வகுப்பெடுத்து, மாணவர்கள் சோர்ந்து விடாமல் இருக்க டீயும், ஸ்நாக்சும் கொடுத்து உற்சாகப்படுத்தி பன்னிரண்டாம் வகுப்பில் அதிக அளவு தேர்ச்சியை கொண்டு வந்துள்ள சென்னை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சீதாலட்சுமி!


அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெறுவதே அரிதான விஷயம். இப்படிப்பட்ட சூழலில் 74% இருந்த தன்னுடைய பள்ளி தேர்ச்சி சதவீதத்தை, 90 சதவிகிதமாக உயர்த்திக் காட்டி பலருக்கு வழிகாட்டி ஆகியிருக்கிறார் இவர்.

சீதாலட்சுமி


464 மாணவ, மாணவியர் படிக்கும் அப்பள்ளி இருபாலர் படிக்கும் பள்ளி. இங்கு அவர் வருவதற்கு முன்னர், ஒழுக்கத்தில், தேர்ச்சி விகிதத்தில் என பலவற்றில் பின் தங்கியிருந்துள்ளது அப்பள்ளி. ஆனால், தான் வந்ததும் தன்னால் மாற்ற இயன்ற அளவு பள்ளியை மாற்ற போராடியிருக்கிறார் சீதாலட்சுமி.


மாலை வேளையில் 5.30 மணி முதல் 7.30 வரை மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நேரத்தை நீடித்தார். ஆனால், அவ்வளவு நேரம் மாணவர்களை பசியோடு வைத்திருக்க அவர் மனம் விரும்பாமல், மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் டீயும், ஸ்நாக்ஸ்சும் வாங்கித்து, மாணவர்களின் மதிப்பெண்களை உயர செய்திருக்கிறார் சீதாலட்சுமி.


+2-ல் 90% தேர்ச்சியை உயர்த்திய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை